பாக் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மர்ம முறையில் கொல்லப்பட்டாரா? பரபரப்பை கிளப்பிய ஆப்கன் ஊடகங்கள்!

Imran Khan Pakistan 1

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியின் அதியாலா சிறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் இன்று தகவல் வெளியிட்டுள்ளன.. இதையடுத்து, இம்ரான் கான் இறந்துவிட்டார் என்ற செய்தி பற்றிய பதிவுகளை பல நெட்டிசன்கள் எக்ஸ் தளத்தில் பகிரத் தொடங்கினர். ஆனால், பாகிஸ்தான் அரசு அல்லது அதன் இராணுவத்தால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுகுறித்து வெளியிடப்படவில்லை.


இதனால் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சிறை வளாகத்துக்கு வெளியே திரண்டு, தங்கள் தலைவர் கானின் உடல்நிலை பற்றிய தகவலை அதிகாரிகள் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்..

எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க நூற்றுக்கணக்கான பாதுகாப்பு பணியாளர்கள் சிறை வளாகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இம்ரான் கானின் சகோதரிகள் அலீமா கான், டாக்டர் உஸ்மா மற்றும்நூரீன் நியாசி மற்றும் பிற கட்சி தலைவர்கள், அவர்களை மேலே செல்ல அனுமதிக்காததால், சிறைக்குப் பக்கத்தில் உள்ள ஃபாக்டரி நக்கா பகுதியில் தர்ணா போராட்டத்தில் அமர்ந்தனர்.

மஜ்லிஸ் வஹ்தத்-இ-முஸ்லிமீன் (MWM) தலைவர் அல்லாமா ராஜா நாசிரின் வேண்டுகோளின் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்று பாகிஸ்தான் டான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது..

இதே மாதிரியான செய்திகள் இந்த ஆண்டு மே மாதத்திலும் வெளியானது குறிப்பிடத்தக்கது. அப்போது வந்த அந்த அறிக்கைகள் பின்னர் பொய்யானவை எனத் தெரியவந்தது.

கடந்த மாதம், பாகிஸ்தானை வலுக்கட்டாயமாக ஒரு “கடினமான நாடாக” (hard state) மாற்றிவிட்டதாக கூறி, ராணுவத் தலைவர் ஆசிம் முனீரை இம்ரான் கான் கடுமையாக விமர்சித்தார். 73 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது அரசியல்வாதியுமான கான், பல வழக்குகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : உலகமே 2025-ல்.. ஆனால் இந்த நாடு இன்னும் 2018 இல் வாழ்கிறது! என்ன காரணம்?

RUPA

Next Post

நாடு முழுவதும் 2 கோடி ஆதார் நீக்கம்.. இது தான் காரணம்.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்...

Wed Nov 26 , 2025
ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும், இது இந்திய அரசால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.. மேலும் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.. ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடையாள மற்றும் முகவரிச் சான்றைப் புதுப்பிக்க வேண்டும். இன்று இந்தியாவில் உள்ள […]
Aadhaar number

You May Like