பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சையின் நடுவில், அருகிலுள்ள அறுவை சிகிச்சை அறையில் ஒரு செவிலியருடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்காக ஒரு நோயாளியை விட்டுச் சென்றதாக இங்கிலாந்து மருத்துவ தீர்ப்பாயத்திடம் தெரிவிக்கப்பட்டது. சமீபத்திய விசாரணையின் போது, சுஹைல் அஞ்சும், 2023 ஆம் ஆண்டு நோயாளியை விட்டு வெளியேறி ஒரு செவிலியருடன் உடலுறவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.
செப்டம்பர் 16, 2023 அன்று கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள டேம்சைட் பொது மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கில் ஒரு செவிலியருடன் ஆலோசகர் மயக்க மருந்து நிபுணரான சுஹைல் அஞ்சும் உடலுறவில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது..
பொது மருத்துவ கவுன்சிலை (GMC) பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண்ட்ரூ மொல்லாய், செப்டம்பர் 16, 2023 அன்று தியேட்டர் 5 இல் 5 அறுவை சிகிச்சைகளுக்கு, டாக்டர் அஞ்சும் மயக்க மருந்து நிபுணராக இருந்ததாகக் கூறினார். மேலும் பேசிய அவர் “ மூன்றாவது வழக்கின் நடுவில், தனக்கு சிறிது இடைவெளி வேண்டும் என்று கூறி, அவர் மற்றொரு செவிலியரை ஆண் நோயாளியை பரிசோதிக்கச் சொன்னார்.. இருப்பினும், அவர் மற்றொரு அறுவை சிகிச்சை அரங்கிற்குச் சென்றார், ஒரு செவிலியருடன் உடலுறவு கொண்டார். மற்றொரு நர்ஸ் அவர்கள் இருவரும் உடலுறவு செய்யும் நிலையில் பார்த்தார்..” என்று கூறினார்..
மான்செஸ்டரில் உள்ள தீர்ப்பாயத்திடம், பித்தப்பையை அகற்ற, அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நோயாளியை சுஹைல் அஞ்சும் விட்டுச் சென்றதாகக் கூறப்பட்டது..
இந்த விஷயத்தை செவிலியர் என்.டி. தெரிவித்ததாகவும், சுஹைல் அஞ்சும் விசாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.. நீதிமன்ற விசாரணையின் போது, நோயாளியை விட்டு வெளியேறி, செவிலியர் சி. உடன் உடலுறவில் ஈடுபட்டதாக அஞ்சும் ஒப்புக்கொண்டதாக மொல்லாய் கூறினார்.
சுஹைல் அஞ்சும் தனது வேலையைப் பற்றி ஆர்வம் கொண்டவர் என்றும், அவருக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் தீர்ப்பாயத்திடம் கூறினார்..
தனது குடும்பத்தை ஆதரிப்பதற்கும் தனது மூத்த குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும் ஒரு வார விடுமுறைக்கு ஈடாக அந்த சனிக்கிழமை வேலை செய்யத் தேர்ந்தெடுத்ததாக அஞ்சும் விளக்கினார்.
“இது ஒரு தனித்துவமான சம்பவம். இது எனக்கு எவ்வளவு அவமானகரமானது என்பதை என்னால் வெளிப்படுத்த முடியாது.. நான் உண்மையிலேயே வருந்துகிறேன், வெட்கப்படுகிறேன், என் நடத்தையின் தீவிரத்தை முழுமையாக உணர்கிறேன்,” என்று அவர் கூறினார்.
“இது மீண்டும் நடக்காது என்பதை குழு உறுதி செய்ய விரும்புகிறேன், ஆனால் அது குற்ற உணர்ச்சியையும் சங்கடத்தையும் நீக்காது,” என்று அவர் வருத்தப்பட்டார்.
யார் இந்த சுஹைல் அஞ்சும்?
லாகூரில் உள்ள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2004 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற சுஹைல் அஞ்சும், தனது மருத்துவ வாழ்க்கையை மீண்டும் தொடங்க இங்கிலாந்து திரும்ப விருப்பம் தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பணியாற்றத் தொடங்கினார், பிரிஸ்டல், மில்டன் கெய்ன்ஸ் மற்றும் டார்ட்ஃபோர்டில் பதவிகளை வகித்தார், பின்னர் 2015 இல் டேம்சைட் மற்றும் குளோசாப் ஒருங்கிணைந்த அறக்கட்டளையில் சேர்ந்தார். அவர் அக்டோபர் 2024 இல் அறக்கட்டளையை விட்டு வெளியேறி ஜனவரியில் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்..