பாலமேடு ஜல்லிக்கட்டு.. சீறிப் பாய்ந்த நடிகர் சூரியின் காளை வெற்றி.. சிதறி ஓடிய வீரர்கள்..!

jallikattu soori

பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும், மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை.. சமீபத்தில் மதுரைக்கு என பிரத்யேக ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.. இந்த நிலையில் இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது..

இந்த போட்டியில் பங்கேற்க 1,000 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. 600 மாடுபிடி வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.. இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டி மொத்த 10 சுற்றுகள் நடைபெறும்.. ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை பிடித்த வீரர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவர்.. இறுதிச்சுற்றில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.. வழங்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்..

இந்த நிலையில் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 4 சுற்றுகள் முடிவடைந்து 5-வது சுற்று நடைபெற்று வருகிறது.. 5-வது சுற்றில் களமிறங்கிய நடிகர் சூரியின் காளை வெற்றி பெற்றுள்ளது.. 4-வது சுற்றில் களம் கண்ட 379 காளைகளில் 57 காளைகளை காளையர்கள் அடக்கினர்.. இதுவரை இறுதிச்சுற்றுக்கு 5 வீரர்கள் தேர்வு செய்யபப்ட்டுள்ளனர்.. அதிகபட்சமாக பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் 11 காளை அடக்கி முதலிடத்தில் இருக்கிறார்..

Subscribe to my YouTube Channel

RUPA

Next Post

HBD Vijay Sethupathi: விஜய் சேதுபதி ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்..? அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Fri Jan 16 , 2026
திரையுலகில் துணை வேடங்களில் நடித்து, பின்னர் ஹீரோவாக மாறி, பான் இந்தியா அளவில் பிரபலமடைந்தவர்கள் மிகவும் குறைவு.. அந்தப் பட்டியலில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி இன்று தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான விஜய் சேதுபதி, தனது தனித்துவமான நடிப்பு மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் தமிழ் திரையுலகில் புகழ்பெற்றார்.. பின்னர் நாடு முழுவதும் […]
Vijay Sethupathi

You May Like