3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் சிலர் மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டனர், சிலர் திமுகவிற்கும், வேறு சிலர் தவெகவுக்கும் சென்றுவிட்டனர்.
இந்த சூழலில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கட்சி தொடர்பான அறிவிப்பு வரும் 19-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஓபிஎஸ் அணியில் இருந்தவர்கள் திமுகவில் இணைந்து வரும் நிலையில், அவருடன் இருந்த காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.. ஓபிஎஸ் அணியில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்..
இந்த ரஞ்சித் குமார் தான் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். கூட்டணி முடிவுகளை எடுப்பதில் ஓபிஎஸ் தாமதாம் காட்டி வருவதால் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஏற்கனவே கட்சியின் பெயர் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பெயரிலேயே கட்சியை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. தமிழகம் முழுவதும் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை புதிய கட்சியில் இணைக்கவும் பண்ருட்டி ராமச்சந்திரன் திட்டமிட்டுள்ளாரம்.. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி ராமச்சந்திரனின் புதிய கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாம்.. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவரின் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பு ஓபிஎஸ் கூடாரத்தை மொத்தமாக காலியாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Read More : Flash : ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுகவில் இணைந்தார்..!



