“பாராசிட்டமால் பாதுகாப்பானது”!. ஆட்டிசம் பாதிக்கும் என்ற டிரம்ப் குற்றச்சாட்டுக்கு WHO விளக்கம்!.

Paracetamol Trump WHO

இந்தியாவில் பாராசிட்டமால் என்று அழைக்கப்படும், குழந்தை பருவ தடுப்பூசி பயன்பாடு மற்றும் கர்ப்ப கால வலி நிவாரணி டைலெனால்(Tylenol) என்ற மருந்து எடுத்துக்கொள்வது நல்லதல்ல என்றும் ஆட்டிசத்துடன் தொடர்புடையதால் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டாம் என்று டிரம்ப் கூறியதற்கு உலக சுகாதார நிறுவனம் விளக்கமளித்துள்ளது.


வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். அதோடு, அந்த மருந்துகளை ஆட்டிசம் விகிதங்களுடன் தொடர்புபடுத்தி பேசினார்.
தான் ஒரு மருத்துவர் அல்ல என்று கூறிய அவர், ஆனால் தனது கருத்தை தெரிவிப்பதாகக் கூறி, அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளர் ராபர்ட் எஃப் கென்னடி ஜுனியர் தலைமையிலான பல மாத விசாரணைகளுக்குப் பின், கர்ப்பிணிப் பெண்கள் அசிட்டோமெனோஃபின் பயன்பாட்டை குறைக்க வேண்டு என்றும் அறிவித்தார்.

மேலும், இது பொதுவாக அமெரிக்காவில் டைலனால் என்றும், இந்தியா மற்றும் பிற நாடுகளில் பாரசிட்டமால் என்றும் விற்கப்படுவதாக கூறினார். அதோடு, கர்ப்ப காலத்தில் இந்த மருந்தை பயன்படுத்துவது, குழந்தைகளுக்கு ஆட்டிசம் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த அறிவுரை, கர்ப்ப காலத்தில் அசிட்டோமெனோஃபின் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று நீண்ட காலமாக கூறிவரும் அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் கல்லூரிக்கு முரணானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளம் குழந்தைகளுக்கு எப்போது வலி நிவாரணிகள் கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து பேசிய டிரம்ப், சில தடுப்பூசிகளை தாமதப்படுத்த வேண்டும் என்றும், கூட்டு தடுப்பூசிகளை தனித்தனி தடுப்பூசிகளாக வழங்க வேண்டும் என்றும் மேலும், டைலனால் எடுத்துக்கொள்வத நல்லதல்ல. அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் கர்ப்பமாக இருக்கும்போது, இந்த மருந்தின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து நாங்கள் மருத்துவர்களிடம் பேச வேண்டும் என்று கூறினார். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு மருந்தை கொடுக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், கர்ப்பிணிப் பெண்கள் கடினமாக இருக்க வேண்டும் என்றும், மிகவும் அதிக காய்ச்சல் இருந்தால் மட்டுமே இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தினார். எனினும், அசிட்டோமெனோஃபின், ஆட்டிசத்திற்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற இந்த கூற்றுகளுக்கு மருத்துவ ஆதாரங்களை ட்ரம்ப் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் டிரம்பின் இந்த கூற்றை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்துள்ளது. அதாவது பராசிடமால் (Paracetamol) கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவதால் ஆட்டிசம் (Autism) உருவாகும் என்பது பற்றிய ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டிரம்பின் கருத்துக்களுக்கு பதிலளித்த WHO செய்தித் தொடர்பாளர் தாரிக் ஜசரேவிக், “ஆதாரங்கள் முரண்பாடாகவே உள்ளன. தடுப்பூசிகள் ஆட்டிசத்தை ஏற்படுத்தாது என்பதை நாங்கள் அறிவோம். தடுப்பூசிகள் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றுகின்றன. இது அறிவியல் நிரூபித்த ஒன்று, இதை கேள்விக்குட்படுத்தக்கூடாது” என்றார்.

ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (EMA) WHO-வின் நிலைப்பாட்டை எதிரொலித்தது. “ஐரோப்பிய ஒன்றியத்தில், மருத்துவ ரீதியாக தேவைப்பட்டால், கர்ப்ப காலத்தில் வலி அல்லது காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமால் (அசிடமினோஃபென்) பயன்படுத்தப்படலாம். ஐரோப்பிய ஒன்றிய பரிந்துரைகளில் மாற்றங்கள் தேவைப்படும் புதிய ஆதாரங்கள் எதுவும் தற்போது இல்லை,” என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. EMA-வின் தலைமை மருத்துவ அதிகாரி ஸ்டெஃபென் திர்ஸ்ட்ரப் மேலும் கூறினார்.

“கர்ப்பிணிப் பெண்களுக்கு வலி அல்லது காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க பாராசிட்டமால் ஒரு முக்கியமான தேர்வாக உள்ளது. எங்கள் ஆலோசனை கடுமையான அறிவியல் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது, மேலும் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் எடுத்துக்கொள்வது குழந்தைகளுக்கு ஆட்டிசத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் நாங்கள் கண்டறியவில்லை.”

Readmore: “கூடவே இருந்து நம்பிக்கை துரோகம் பண்ணிட்டீங்களே”..!! பாதுகாவலர் கொடுத்த பரபரப்பு புகார்..!! வேதனையில் உடைந்து போன சூர்யா..!!

KOKILA

Next Post

குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு வேறு கோவிலுக்கு செல்லலாமா..? ஆன்மீகம் சொல்வது என்ன..?

Wed Sep 24 , 2025
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குலதெய்வம் இருக்கும். பல தலைமுறைகளாக அந்தக் குடும்பத்தை காத்து வரும் குலதெய்வத்தை வழிபடுவது மிகவும் அவசியம். குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபடும்போது, ஒருசில ஆன்மீக நடைமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும். இதில் முக்கியமான கேள்வி, குலதெய்வக் கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, வேறு கோயில்களுக்குச் செல்லலாமா..? என்பதுதான். இதுபற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்..? குலதெய்வம் என்பது நம் முன்னோர்களின் ஆத்ம சக்தியுடன் […]
Kula Deivam Temple 2025

You May Like