பராசக்தி படத்திற்கும் சென்சார் சிக்கல்..! 23 இடங்களில் கட்? 10-ம் தேதி ரிலீஸ் ஆகுமா?

parasakthi 1

சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25-வது படமான இந்த படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.. அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.. இந்த படம் முதலில் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது..


ஜனவரி 9-ம் தேதி விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.. பராசக்தி படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. எனவே இந்த முறை ஜனநாயகன் படத்துடன் பராசக்தி படம் நேரடியாக மோதும் நிலை உருவானது..

ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. ஜனநாயகன் படத்தை போலவே பராசக்தி படத்திற்கும் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

தணிக்கை சான்றிதழுக்காக இந்த படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. எனினும் இந்த படத்திற்கும் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறப்பட்டது.. மேலும் இந்த படத்தை மறு ஆய்வுக்கும் சென்சார் போர்டு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.. இதனால் பராசக்தி படம் வெளியாகுமா என்பதில் குழப்பம் நீடித்தது..

இந்த நிலையில் பராசக்தி படத்தில் மொத்தம் 23 இடங்களில் சென்சார் கட் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. மொத்தம் 23 இடங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என தணிக்கை குழு பரிந்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன..  எனினும் 23 இடங்களில் திருத்தங்கள் செய்தால் படத்தின் கதையே பாதிக்கப்படும் என்று இயக்குனர் மறு ஆய்வு கமிட்டியை தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளாராம்..

எனவே மீண்டும் ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.. இன்று இரவு அல்லது நாளை மதியத்திற்குள் சென்சார் சான்றிதழ் வரவில்லை எனில் பராசக்தி படத்தின் ரிலீஸும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

Read More : ஜனநாயகன் சர்ச்சை.. “ முடிந்தால் அரசியல்வாதி விஜய் உடன் மோதி பாருங்க..” பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சவால்..!

RUPA

Next Post

50 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த காதலர்கள் குறும்படத்தால் மீண்டும் இணைந்தனர்.! பிள்ளைகள் முன் திருமணம்..! நெகிழ வைக்கும் காதல் கதை.!

Thu Jan 8 , 2026
காதலுக்கு வயது வரம்பு இல்லை என்பதை இந்தக் கேரளத் தம்பதியினர் நிரூபித்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் பதின்ம வயதில் தொடங்கிய ஒரு காதல், இரு குடும்பங்களின் பிள்ளைகள் முன்னிலையில் திருமணத்தில் முடிந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முண்டக்கல் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், தனது பதின்ம வயதிலேயே ரஷ்மி மீது மிகுந்த காதல் கொண்டிருந்தார். ஆனால், அவளிடம் சொல்லப் பயந்து தனது காதலை மனதிற்குள்ளேயே […]
short film reunites old lovers 1 1

You May Like