பெற்றோர்களே..!! உங்கள் குழந்தைக்கு அடிக்கடி இந்த பழக்கம் இருக்கா..? இதயநோய் வரும் அபாயம்..!! ஆய்வு முடிவுகள் எச்சரிக்கை..!!

Heart Attack 2025

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் மொபைல் ஃபோன்கள், டேப்லெட்டுகள் அல்லது கணினிகளில் அதிக நேரம் கேம் விளையாடுவது அல்லது சமூக வலைதளங்களை பார்ப்பது பாதிப்பில்லாத பொழுதுபோக்கு என்று கருதப்படுவதுண்டு. ஆனால், சமீபத்திய புதிய ஆய்வு ஒன்று, இத்தகைய டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்பாடு அவர்களின் இதய ஆரோக்கியத்தில் மறைமுகமான மற்றும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த ஆய்வுக் கட்டுரையானது அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதழில் வெளியாகியுள்ளது.


இதய வளர்ச்சிதை மாற்ற அபாயம் அதிகரிப்பு :

ஸ்மார்ட்ஃபோன், தொலைக்காட்சி, அல்லது கேமிங் கன்சோல்கள் என எதுவாக இருந்தாலும், ஸ்கிரீன்களுக்கு முன்னால் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, உயர் ரத்த அழுத்தம், இன்சுலின் ரெசிஸ்டென்ஸ், அதிக கொலஸ்ட்ரால் போன்ற இதய வளர்ச்சிதை மாற்றப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

2023ஆம் ஆண்டில் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வெளியிட்ட அறிக்கையின்படி, 2 முதல் 19 வயதுக்குட்பட்ட அமெரிக்கக் குழந்தைகளில் 29% பேருக்கு மட்டுமே ஆரோக்கியமான கார்டியோமெட்டபாலிக் அமைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தபோது, ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கான டிஜிட்டல் ஸ்கிரீன் பயன்பாட்டுக்கும், இளைஞர்களிடையே இதய மற்றும் வளர்ச்சிதை மாற்ற அபாயங்கள் அதிகரிப்பதற்கும் இடையே நேரடியான தொடர்பு இருப்பது தெளிவாகியுள்ளது.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வின் முதன்மை எழுத்தாளர் டேவிட் ஹார்னர் பேசுகையில், “குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவத்தில் ஸ்கிரீன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, நீண்ட காலத்துக்கு இதயம் மற்றும் வளர்ச்சிதை மாற்ற ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆய்வு முடிவுகள் பிரமிக்க வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்கிரீன் பயன்பாட்டில் செலவழிக்கும் ஒவ்வொரு கூடுதல் மணி நேரமும், 10 வயதுடைய குழந்தைகளில் 0.08 ஸ்டாண்டர்ட் டீவியேஷனாகவும், 18 வயதுடைய குழந்தைகளில் 0.13 ஸ்டாண்டர்ட் டீவியேஷனாகவும் கார்டியோமெட்டபாலிக் ஸ்கோர்களை அதிகரித்துள்ளது.

இதன் பொருள், ஒரு நாளைக்கு 3 மணி நேரம் கூடுதலாக ஸ்கிரீன் பார்ப்பவர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்களைக் காட்டிலும் கால் முதல் பாதி ஸ்டாண்டர்ட் டீவியேஷன் வரையிலான அதிக ஆபத்தில் உள்ளனர். மேலும், தாமதமாகத் தூங்கும் அல்லது குறைவான நேரம் தூங்கும் குழந்தைகளும் அதிக ஆபத்துக்கு உள்ளாவதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

பெற்றோருக்கான எளிய வழிகள் :

குழந்தைகளின் ஸ்கிரீன் நேரத்தைக் குறைப்பது சவாலானது என்றாலும், நிபுணர்கள் சில எளிய நடைமுறைகளை பரிந்துரைக்கின்றனர்.

‘ஸ்கிரீன்-ஃப்ரீ’ நேரம் : உணவு நேரம் அல்லது தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் மொபைல் பயன்பாட்டிற்குத் தடை விதிப்பது.

வெளிப்புற செயல்பாடுகள் : மாலை நேரங்களில் நடைப்பயிற்சி அல்லது விளையாட்டுகளை ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் அமர்ந்திருக்கும் நேரத்தைக் குறைக்கலாம்.

படுக்கையறையில் டிஜிட்டல் திரைகளைத் தவிர்ப்பது : இது தாமதமான தூக்கத்தையும், இரவு நேரப் பயன்பாட்டையும் தடுக்க உதவும்.

முன்மாதிரியாக இருங்கள் : குழந்தைகள் தாங்கள் சொல்வதைக் கேட்பதைவிட, பெற்றோர்கள் என்ன செய்கிறார்களோ அதைப் பிரதிபலிப்பார்கள் என்பதால், பெரியவர்கள் டிஜிட்டல் பயன்பாட்டை குறைத்து முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

பொழுதுபோக்கு : இசை, கலைகள் அல்லது புதிர் விளையாட்டுகள் போன்ற டிஜிட்டல் திரைகளுக்கு மாற்றான மற்றும் ஊக்கமளிக்கும் பொழுதுபோக்குகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவது அவசியம்.

Read More : கந்த சஷ்டி விரதம்..!! முருகப் பெருமானின் அறுபடை வீடு..!! எங்கு விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்..?

CHELLA

Next Post

இன்னைக்கு இந்த பொருட்களை மட்டும் பரிசா கொடுத்துறாதீங்க..!! உங்களுக்கு தான் பிரச்சனை வரும்..!!

Mon Oct 20 , 2025
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, இந்திய கலாச்சாரத்தில் தனித்துவமான இடத்தைப் பெறுகிறது. இந்த நன்னாளில் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வது அன்பையும், அன்யோன்யத்தையும் அதிகரிக்கும் ஒரு உன்னதமான செயலாகும். ஆனால், பரிசுகளைத் தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால், சில பொருட்களைப் பரிசளிப்பது எதிர்மறை உணர்வுகளைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே, எந்தெந்த பொருட்களைத் தவிர்ப்பது நல்லது என்பதை முதலில் […]
Diwali 2025 3

You May Like