அங்கிதா பந்தாரி கொலை வழக்கில் இறுதிச் சடங்கு செய்வதற்கு அவரது உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்துள்ளனர்.
உத்தரகண்டில் பவுரி மாவட்டத்தில் 19 வயது இளம் பெண் கடந்த 6 நாட்களுக்கு முன் காணாமல்போனார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து நேற்று ரிசார்ட்டில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அங்கிதா பந்தாரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்தது தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரிசப்ஷனிஸ்டான அங்கிதா பந்தாரியை கொலை செய்து கால்வாயில் வீசப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் அவரது உடலைநேற்று கால்வாயில் இருந்து மீட்டனர்.
அரசு மருத்துவமனையில் அங்கிதா உடலை அதிகாரிகள் பிரேதபரிசோதனை செய்தனர்.அதில் , தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்துள்ளார். மேலும் , அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளதாக முதன்மை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அங்கிதாவின் உடலை வாங்க பெற்றோர்கள் மறுத்துள்ளனர். முழு பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே நாங்கள் உடலை வாங்குவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்கள் மகள் உயிரிழப்பில் சன்மானம் வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். இறுதி அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகின்றது. இதனிடையே குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத்தருவோம் என தெரிவித்துள்ளார்.