ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய மல்யுத்த வீராங்கனைகள்.. ஒரு வருடம் சஸ்பெண்ட்..!!

Indian wrestler Ritika Hooda

இந்தியா மல்யுத்த வீராங்கனை ரித்திகா ஹூடா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதற்காக ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை ரீத்திகா ஹூடா, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (NADA) அவரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.

ஊக்கமருந்து விதிமீறலுக்காக தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி மைதானத்தில் நடந்து வரும் தேசிய மல்யுத்த முகாமிலிருந்து ஹூடா வெளியேற வேண்டும் என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) கூறியுள்ளது. ரித்திகா ஹூடா உட்பட இரண்டு மல்யுத்த வீரர்களும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியதற்காக, தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட மூவரும் மல்யுத்த முகாமை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் மூவரும் ரோஹ்தக்கில் உள்ள ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள். ஆசிய சாம்பியன்ஷிப்பிற்கான தேர்வு சோதனைகளின் போது மார்ச் 15 அன்று 22 வயதான ரீதிகா பரிசோதிக்கப்பட்டார். அவரது சிறுநீர் மாதிரியில் தடைசெய்யப்பட்ட பொருளான S1.1 அனபோலிக் ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டுகளின் தடயங்கள் இருப்பது தெரியவந்தது.

ரீத்திகா ஹூடா யார்? 76 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் ரீத்திகா, இந்தியாவின் சிறந்த மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவராக அறியப்படுகிறார். 2024 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மே மாதம் மங்கோலியா’வில் உள்ள உலான்பாதர் தரவரிசைத் தொடரில் தங்கப் பதக்கம் பெற்றார். 2024 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்க வாய்ப்பு உள்ள வீராங்கனையாக கருதப்பட்டார்.

Read more: பாரத் பந்த்: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது.. பேருந்து சேவை பாதிப்பு..?

English Summary

Paris Olympian Wrestler Reetika Hooda Fails Dope Test

Next Post

எடப்பாடியை தொடர்ந்து அரசியல் சுற்றுப்பயணம் செல்லும் OPS.. யாருக்கு ஆதரவு..?

Wed Jul 9 , 2025
2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற பெயரில், ஜூலை 23-ம் தேதி வரை கொங்கு மண்டலம், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இப்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் பாஜக மற்றும் […]
EPS OPS 2025

You May Like