பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
திமுக 2021 தேர்தல் வாக்குறுதியில், திமுக ஆட்சிக்கு வந்த உடன் அனைத்து பகுதி நேர ஆசிரியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் 4 ஆண்டுகள் ஆகியும் இந்த வாக்குறுதியை திமுக நிறைவேற்ற என்று கூறியும், இதற்கு முன்பு வரை பல கட்டப் போராடங்களை நடத்தி வருகின்றனர்..
அந்த வகையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் 12 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
திமுகவின் 181வது தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என்ற பதாகைகளை கையில் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.. இந்த நிலையில் இன்று பேரணியாக சென்ற அவர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.. போராட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது, சாலை மறியலுக்கு அனுமதி இல்லை என்று கூறி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர்..
இந்த நிலையில் பகுதி நேர ஆசியர்கள் கோரிக்கை தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். விரைவில் நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
Read More : 1 நிமிடத்தில் கன்ஃபார்ம் ரயில் டிக்கெட் பெறலாம்.. இந்த ஒரு ஸ்மார்ட் ட்ரிக் போதும்…