இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் — சிலர் வேலைக்கு செல்கின்றனர், சிலர் சுற்றுலா செல்கின்றனர். கூட்டம் நிறைந்த சாதாரண பெட்டியிலிருந்து வசதியான ஏசி பெட்டிவரை, அனைத்து வகை பெட்டிகளிலும் எப்போதும் கூட்டம் நிறைந்ததாகவே கூறப்படுகிறது..
இந்திய ரயில்வே தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்கி நாட்டின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கிறது. ஆனால் இரவில் ரயிலில் பயணம் செய்யும் போது சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். இத்தவறுகள் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ரயில்வே விதிகளின்படி அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
அதனால், பயணம் செய்வதற்கு முன் கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்ள வேண்டும்
ஸ்பீக்கரில் பாடல் போடுதல் அல்லது சத்தமாகப் பேசுதல்
இரவு நேரத்தில் பலர் தங்களது மொபைல் ஸ்பீக்கரில் பாடல்கள் அல்லது வீடியோக்கள் ஓடவிடுவது வழக்கமாகியுள்ளது. இது மற்ற பயணிகளின் அமைதியை குலைக்கும்.
ரயில்வே சட்டப்படி, ஒருவர் பிறருக்கு தொந்தரவு அளித்தால் புகார் வந்தவுடன் அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம். இசை கேட்க வேண்டுமெனில் இயர்போன் பயன்படுத்துங்கள். அதேபோல், சத்தமாக பேசுதல் அல்லது ஸ்பீக்கர் போனில் பேசுதல் கூட தவிர்க்க வேண்டும்.
இரவில் கோச் விளக்குகளை (main lights) எரியவைத்தல்
சிலர் இரவில் வாசிக்கவோ, பேசிக்கொள்ளவோ கோச் விளக்குகளை எரியவைத்து விடுகிறார்கள். ஆனால் ரயில்வே விதிகளின்படி, இரவில் “night light” மட்டுமே எரியவிட அனுமதி உண்டு. மற்ற பயணிகள் தூங்கும்போது இது தொந்தரவு அளித்தால், புகார் அளிக்கப்பட்டால் ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம். முதல் முறை எச்சரிக்கை அளிக்கப்படும்; மீண்டும் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
இரவில் சத்தமாகப் பேசுதல் அல்லது விளையாடுதல்
இரவில் அமைதியை பேணுவது மிகவும் முக்கியம். ஆனால் சிலர் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சத்தமாக பேசுவது, சிரிப்பது, விளையாடுவது போன்றவற்றால் பிறருக்கு தொந்தரவு ஏற்படுகிறது. இவ்வாறு நடந்தால், பயணிகள் TTE அல்லது ரயில்வே போலீசிடம் புகார் அளிக்கலாம். எச்சரிக்கை பிறகும் தொடர்ந்து இப்படிச் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
Read More : துணை முதல்வர் கார் மீது செருப்பு வீசி தாக்குதல்.. பீகாரில் பெரும் பரபரப்பு..



