சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் “ நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்தின் மூலம் 1,256 உயர்தர மருத்துவ மையங்களில் 17 சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படும். இந்த முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் கட்டணமின்றி முழு பரிசோதனை செய்யலாம்.. புற்றுநோய் பாதிப்பை கண்டறிய கூடிய பரிசோதனையும் செய்யப்படும்..
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு நான் பங்கேற்கு முதல் நிகழ்ச்சி இது.. கல்வியும், மருத்துவமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள்.. கல்விக்காகவும், மருத்துவத்துக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.. உடல் நலமாக இருந்தால் மகிழ்ச்சியாக வாழ முடியும்.. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஐ.நா. சபையே பாராட்டி உள்ளது.. ஒரு திட்டம் கொண்டு வந்தால், அது எல்லோரையும் சென்றடைய வேண்டும்.. ஒருவர் கூட விடுபடக் கூடாது..
இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 1,256 முகாம்கள் நடத்தப்படும்.. மருத்துவர்கள் உட்பட 17 மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள்.. முகாம்களில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சர்க்கரை அளவு, சிறுநீரக சோதனைகள் செய்யப்படும்.. பெண்களுக்கான கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் செய்யப்பட உள்ளது.. உங்கள் பரிசோதனை முடிவுகள் எல்லாமே உங்களுக்கு வழங்கப்படும்..
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமுக்கு வருவோரை கனிவோடும், பணிவோடும் மருத்துவ பணியாளர்கள் நடத்த வேண்டும்.. நோயாளிகளை இனி மருத்துவ பயனாளிகள் என்று அழைக்கலாம்.. நகர்ப்புற மருத்துவ சேவை கிராமங்களிலும் கிடைக்க வேண்டும் என்பதே நமது அரசின் குறிக்கோள்.. இந்த முகாம்களை மக்கள் எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.. உடல் நிலை நன்றாக இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும்.. தமிழ்நாடு தான் எதிலும், எப்போதும் நம்பர் ஒன். அதே போல் மருத்துவ சேவைகள் வழங்குவதிலும் தமிழ்நாடு தான் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும்.. இது போன்ற திட்டங்களால் அது நிறைவேறும் என்று நம்புகிறேன்..” என்று தெரிவித்தார்..