Flash | கடும் கோபத்தில் மக்கள்..!! விஜய் சுற்றுப்பயணத்திற்கு அதிரடி தடை..? தவெகவினர் அதிர்ச்சி..!!

TVK Vijay 2025 2

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (செப்.27) கரூரில் மேற்கொண்ட 3ஆம் கட்டப் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பலரும் அடங்குவர். மேலும், பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தமிழ்நாட்டு மட்டுமின்றி நாட்டையே உலுக்கியுள்ளது.


2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டுப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய், ஏற்கெனவே திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கடந்த வாரங்களில் பிரச்சாரம் செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்று, அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது விஜயைக் காணவும், அவர் பேசுவதைக் கேட்கவும் அதிகாலை முதலே அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டிருந்தனர். தவெக நிர்வாகிகள் சுமார் 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக அதிகளவில் கூட்டம் கூடியது.

மேலும், தவெக தலைவர் விஜய் திட்டமிட்ட நேரத்தைக் காட்டிலும் சற்று காலதாமதமாகவே வந்தார். ஒரு கட்டத்தில், பெருகிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைமை கைமீறிச் சென்றது. கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், மக்கள் ஒருவருக்கொருவர் மோதி கீழே விழுந்தனர். இந்த நெரிசலில் சிக்கிப் 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தைக் கேள்விப்பட்டதும், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, மற்றும் மா. சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நேற்று இரவே கரூர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

இதைத் தொடர்ந்து, நள்ளிரவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டோரையும், சிகிச்சை பெறுபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நேற்று கரூரில் தனது பிரச்சாரப் பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது, கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு குறித்த கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. ஆனால், எந்தக் கேள்விக்கும் விஜய் பதிலளிக்காமல், விமான நிலையத்திற்குள் அமைதியாக சென்றுவிட்டார்.

இந்தச் சம்பவம் ஒருபுறம் இருக்க, கரூர் கூட்டத்தில் திரண்டிருந்த மக்களுக்குச் சரியான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டு தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அலட்சியம் குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த சில நபர்கள் அவர் மீது செருப்பைத் தூக்கி வீசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

உயிரிழப்புகளால் மக்கள் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில், இனி விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அடுத்ததாக அக்டோபர் 5ஆம் தேதி வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், கரூர் துயரச் சம்பவத்தை அடுத்து அந்த பிரச்சாரம் தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கரூர் சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இனி விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Read More : கரூரில் பெரும் துயரம்…! பள்ளி மாணவர்கள் உட்பட 39 பேர் பலி… கதறி அழுத அமைச்சர் அன்பில் மகேஷ்…!

CHELLA

Next Post

நோட்..! இன்று நடைபெறும் TNPSC குரூப் 2 தேர்வு...! 9 மணிக்கு பின் தேர்வு அறைக்கு சென்றால் அனுமதி இல்லை...!

Sun Sep 28 , 2025
தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தெகுதி-1 மற்றும் IIA)-இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR) தேர்வு இன்று நடைபெற உள்ளது. இத்தேர்வினை 5,53,634 (பொதுத் தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 4,47,421 மற்றும் பொது ஆங்கிலத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 1,06,213) […]
group 2 tnpsc 2025

You May Like