மக்களே ஜாக்கிரதை.. திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் அது பாஜகவுக்கு ஓட்டுப் போட்ட மாதிரி.. விஜய் பேச்சு!

tvk vijay campaign in namakkal and karur place change 1

தவெக தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று நாமக்கல் நகரில் கே.எஸ் திரையரங்கம் அருகே தவெக தலைவர் விஜய் மாபெரும் தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ அனைவருக்கும் வணக்கம்.. நிறைய தொழில்கள் செய்யும் ஊர் நாமக்கல்.. நாமக்கல் மாவட்டத்தின் முட்டை உலகம் கூட ரொம்ப பிரசித்தி பெற்றது.. தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்ச்சி ஊட்டும் ஊரும் இது தான்.. தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லட்டா.. நாடி, நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரிகளை எழுதியவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தான்..


நாமக்கல்லில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.. இப்படி வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு தேவையா? பாசிச பாஜக உடன் நாங்கள் ஒத்து போகமாட்டோம்.. இந்த திமுக மாதிரி மறைமுக கூட்டணியில் இருக்க மாட்டோம்.. அம்மா அம்மா என்று சொல்லிக் கொண்டு, ஜெயலலிதா அவர்கள் சொன்னதை மறந்துவிட்டு இன்று பொருந்தா கூட்டணி வைத்திருக்கிறார்களா? அவர்கள் மாதிரியும் நாங்கள் இருக்க மாட்டோம்.. பாஜக உடன் ஏன் பொருந்தா கூட்டணி என்று அதிமுகவின் தொண்டர்கள் கேட்கின்றனர்.. அதிமுக – பாஜக உறவுக்காரர்கள் என்று அனைவருக்கும் தெரியும்.. திமுக குடும்பம் பாஜக உடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்க்கள்..

வரப்போகும் தேர்தலில் நீங்கள் திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் அது பாஜகவுக்கு ஓட்டுப் போட்ட மாதிரி.. வேண்டாம் மக்களே ஜாக்கிரதை.. யோசிங்க.. மறுபடியும் சொல்றேன்.. 2026-ல் ஒன்னு தவெக.. இன்னொன்னு திமுக.. இரண்டுக்கும் தான் போட்டி.. இந்த தேர்தலில் ஒரு கை பார்த்துவிடலாம்.. மாபெரும் மக்கள் சக்தி கொண்ட எளியோரின் குரலாக இருக்கும் தவெக, கொள்கை என்ற பெயரில் மக்களை ஏமாற்று கொள்ளையடிக்கும் திமுக இந்த இருவருக்கும் நடுவில் தான் போட்டி.. மோசமான ஆட்சியை கொடுக்கும் திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வரணமா? தவெக ஆட்சி அமைக்க வேண்டுமா? நம்பிக்கை உடன் இருங்க நல்லதே நடக்கும்..” என்று தெரிவித்தார்..

Read More : புதுசா சொல்லுங்கன்னா என்ன சொல்றது? CM மாதிரி அடித்துவிடவா? நாமக்கல்லில் விஜய் கேள்வி..

RUPA

Next Post

மூச்சுக்கு 300 தடவை அம்மா அம்மா என்று சொல்லிவிட்டு.. பாஜக உடன் எதற்கு சந்தர்ப்பவாத கூட்டணி..? விஜய் கேள்வி..

Sat Sep 27 , 2025
விஜய்யின் தவெக 2026-ல் தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.. வார இறுதி நாட்களில் சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் பிரச்சாரம் செய்து வருகிறார்.. திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் கடந்த வாரம் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. நாமக்கல் நகரில் கே.எஸ் திரையரங்கம் அருகே […]
tvk vijay namakkal

You May Like