தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்..
அதன்படி இன்று நெல்லை, தென்காசி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கரூர், திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, நாமக்கல், சேலம், திருச்சியில் கனமழை பெய்யக்கூடும்.. நாளை மறு நாள் கோவை, திருப்பூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வரும் 14-ம் தேதி கோவை, திருப்பூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 15-ம் தேதி நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்..
வரும் 16-ம் தேதி, கோவை, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.. வரும் 17-ம் தேதி கோவை, திருப்பூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டியும் இருக்கக்கூடும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : இயேசு மீது ஆணையாக எப்போதும் எவருடனும் கூட்டணி இல்லை.. சீமான் திட்டவட்டம்!



