பிங்க் வாட்ஸ்அப்பை டவுன்லோட் செய்ய வேண்டாம். எனவும் டவுன்லோட் செய்வதற்கான லிங்க்-ஐ கூட கிளிக் செய்ய வேண்டாமென்றும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிங்க் நிற whatsapp செயலி மக்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது whatsapp செயலியில் பிங்க் நிற வாட்ஸ் அப்பை பதிவிறக்கம் செய்ய என்ற லிங்கை அனுப்பப்படுகிறது. அதனை கிளிக் செய்யும்போது பயனரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகிறது. இதன் மூலமாக மோசடி கும்பல் வங்கி கணக்கில் பணத்தை கையாடல் செய்து விடுகின்றனர். இந்நிலையில் மும்பை காவல் துறை இது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல் ஒடிசாவை சேர்ந்த சைபர் கிரைம் பாதுகாப்பு நிபுணர் பிங்க் வாட்ஸ் அப் மூலம் மோசடிகள் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக இந்த செயலியை முதலில் நீங்கள் மொபைலில் இருந்து நீக்க வேண்டும். மேலும் சந்தேகத்திற்குரிய இனிப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
அதாவது பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி பிங்க் வாட்ஸ் அப்பை தொட்டீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட்.போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். பிங்க் வாட்ஸ் அப் மெசேஜ் அதிகமாக பரவி வரும் நிலையில், மும்பை காவல்துறையோ பிங்க் வாட்ஸ் அப்பின் முகமூடியை கிழித்தெறிந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்தால் வரக்கூடிய விபரீதங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, தெரியாமல் கூட பிங்க் வாட்ஸ்அப்பை டவுன்லோட் செய்ய வேண்டாம். அவ்வளவு ஏன், டவுன்லோட் செய்வதற்கான லிங்க்-ஐ கூட கிளிக் செய்ய வேண்டாமென்று வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த மெசேஜுடன் வரும் இணைப்பானது ஒரு ஃபிஷிங் லிங்க் (Phising Link) ஆகும். அதை நீங்கள் கிளிக் செய்யும் பட்சத்தில், அது உங்கள் ஸ்மார்ட்போனை பாதித்து, உங்களை பற்றிய முக்கியமான தகவல்களை திருடிக்கொள்ளும் அல்லது ஹேக்கர்களுக்கு உங்கள் ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தும் ரிமோட் கண்ட்ரோலை கொடுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிங்க் வாட்ஸ்அப் லிங்க்-ஐ கிளிக் செய்தால் என்ன நடக்கும்? உங்கள் ஸ்மார்ட்போனின் காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள மொபைல் எண்கள் மற்றும் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள் திருடப்படலாம். நிதி இழப்புகளை கூட சந்திக்கலாம்; உங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்டுள்ள பாஸ்வேர்ட்கள் தவறாக பயன்படுத்தப்படலாம். ஸ்பேம் அட்டாக்கிற்கு உள்ளாகலாம், உங்கள் மொபைல் போனானது ஹேக்கர்களால் முழுமையாக கட்டுப்படுத்தப்படலாம்.
பிங்க் வாட்ஸ்அப் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? ஒருவேளை போலியான பிங்க் வாட்ஸ் அப்பை நீங்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்திருந்தால், அதை உடனடியாக டெலிட் அன்இன்ஸ்டால் செய்யவும். பிங்க் வாட்ஸ்அப் மட்டுமல்ல, நம்பகத்தன்மையற்ற அல்லது அறியப்படாத சோர்ஸ்களிலிருந்து கிடைக்கும் எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். எந்தவொரு ஆப்பை பதிவிறக்கம் செய்தாலும், அதை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் போன்ற முறையான மற்றும் நம்பகமான இணையதளங்களில் இருந்து மட்டுமே செய்யவும். அதுமட்டுமின்றி, சரியான அங்கீகாரம் அல்லது சரிபார்ப்பு இல்லாமல் எந்த விதமான இணைப்புகளையும். மெசேஜ்களையும் மற்றவர்களுக்கு அனுப்பவும் வேண்டாம். இப்படி கொஞ்சம் உஷாராக இருந்தாலே மோசடிக்காரகளின் வலைகளில் விழாமல் தப்பிக்கலாம்