’மக்களே இனி அதிகாரிகள் கேட்டாலும் தராதீங்க’..!! பத்திரப் பதிவுத்துறையில் அதிரடி மாற்றம்..!! அரசு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலக பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்ட உள்ளன. இதன் காரணமாக பத்திரப்பதிவுக்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் 15 நிமிடத்திற்குள் பதிவு பணி முடிந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், பத்திரப்பதிவிற்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய அனைத்து தொகையையும் ஆன்லைன் மூலமாக தான் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான ஏடிஎம் கார்டு வசதிகளும் சார் பதிவாளர் அலுவலகங்களில் செய்யப்பட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்களில் இனி நேரடி பண பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறாது. முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை பொதுமக்கள் செலுத்த வேண்டும். இதனால் பத்திரப்பதிவிற்கு வரும்போது பொதுமக்கள் கையில் பணம் எடுத்து வர தேவை இல்லை என்றும் பத்திரப்பதிவிற்கு அதிகாரிகள் பணம் கேட்டால் பொதுமக்கள் யாரும் வழங்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

’வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக்கூடாது’..!! ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

Mon Jun 19 , 2023
தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதனால் எக்காரணம் கொண்டும் 1, 2, 3ஆம் வகுப்புகளுடன் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஈராசிரியர் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியரும், நான்கு […]
Teacher

You May Like