இந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிறு கட்டினால் அதிர்ஷ்டம் தான்..!! ஆனால் இந்த விஷயத்தை மட்டும் மறந்துறாதீங்க..!!

Black 2025

இந்துக்களின் பாரம்பரிய வழக்கங்களில் கை மற்றும் கால்களில் கயிறு கட்டுவது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இது வெறும் அலங்காரப் பொருளாக மட்டுமின்றி, தீய திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களில் இருந்து காக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாகவும் நம்பப்படுகிறது. பல வண்ணக் கயிறுகள் இருந்தாலும், அதிக அளவில் கருப்பு மற்றும் சிவப்பு நிறக் கயிறுகளே பயன்படுத்தப்படுகின்றன.


இருப்பினும், சிலருக்குக் கருப்பு நிறம் பொருந்தாது என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில், ஜோதிட சாஸ்திரத்தின்படி கருப்பு கயிறு யாருக்குச் சிறந்தது, அதை எப்படி அணிய வேண்டும் என்று பார்க்கலாம். கருப்பு கயிறு பொதுவாக திருஷ்டிக்காகவே கை, கால்கள், இடுப்பு போன்ற இடங்களில் கட்டப்படுகிறது.

இந்த கயிறு, நம்மை சுற்றி வரும் எதிர்மறை ஆற்றலை தடுத்து, நேர்மறை அதிர்வுகளை மேம்படுத்துவதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்து சாஸ்திரங்களின்படி, இதை அணிவது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது. ஒரு முக்கியமான விதி என்னவென்றால், கருப்புக் கயிறுடன் வேறு எந்த நிற கயிறையும் சேர்த்து அணியக் கூடாது. அவ்வாறு செய்வது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்துவிடும் என்று கூறப்படுகிறது.

எந்த ராசிக்காரர்களுக்கு சிறந்தது..?

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மகரம், துலாம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு கருப்பு நிறம் மிகவும் நல்லது. இந்த ராசிக்காரர்கள் எவ்வித சந்தேகமும் இன்றி கருப்பு நிற ஆடைகள் மற்றும் கருப்பு கயிறுகளை அணியலாம். இது அவர்களுக்கு சுப பலன்களை கொடுக்கும்.

அணியும் முறை மற்றும் பலன்கள் :

கருப்பு கயிறு அணியும் முறையில் ஆண்கள் மற்றும் பெண்ணுக்கு இடையே வேறுபாடு உள்ளது. பெண்கள் சனிக்கிழமை அன்று தங்கள் இடது கை மற்றும் காலில் இந்தக் கருப்பு நூலை கட்டுவது மிகவும் உகந்தது. அதே நேரத்தில், ஆண்கள் தங்கள் வலது கை மற்றும் கால்களில் கருப்பு நூல் அணிவது சுபமாகக் கருதப்படுகிறது.

உங்கள் ஜாதகத்தில் தையா அல்லது சனி சதே சதி போன்ற சனியின் பாதிப்புகள் இருந்தாலோ, அல்லது ராகு-கேதுவின் நிலை பலவீனமாக இருந்தாலோ, கருப்புக் கயிறு அதற்குப் பரிகார பலன் அளித்துச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிட ரீதியாக நம்பப்படுகிறது.

Read More : இனி அனைவருமே கார் வாங்கலாம்..!! மாதம் ரூ.1,999 செலுத்தினால் போதும்..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாருதி..!!

CHELLA

Next Post

கரூர் சம்பவம் எதிரொலி..!! தலைமறைவான தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்..!! வலைவீசி தேடும் போலீஸ்..?

Mon Sep 29 , 2025
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கரூர் மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து கரூர் காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கட்சியின் பொதுச்செயலாளர் […]
Vijay Bussy Anand 2025

You May Like