தமிழ்நாட்டில் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரேஷன் கார்டு வகையை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை அரசு வழங்கி வருகிறது. திண்டுக்கலில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போது மாநிலம் முழுவதும் 2.20 கோடியே மேற்பட்ட குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ள நிலையில், அனைத்தும் ஒரே வகையானது அல்ல. பொதுமக்களின் பொருளாதார நிலையை பொருத்து, ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
* அந்தியோதயா அன்ன யோஜனா (AAY)
* முன்னுரிமை குடும்ப அட்டை (PHH)
* முன்னுரிமையற்ற குடும்ப அட்டை (NPHH)
* சர்க்கரை விருப்ப அட்டை (NPHH-S)
* பொருளில்லா குடும்ப அட்டை (NPHH-NC)
இந்த வகைப்பாட்டின் அடிப்படையில், நபரின் வருமானம் மற்றும் குடும்ப சூழ்நிலையை பரிசீலித்து கார்டுகள் வழங்கப்படுகின்றன. முக்கியமாக, சிலர் தற்போது வைத்திருக்கும் NPHH (முன்னுரிமையற்ற) கார்டுகளை, தகுந்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன், PHH (முன்னுரிமை) கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் 20 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும், அதில் 5 லட்சம் NPHH அட்டைகள் PHH ஆக மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 13,700 குடும்பங்களுக்கு இந்த மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
PHH ரேஷன் கார்டு பெற்றவர்கள், அரசின் மானிய திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை மிகவும் குறைந்த விலைக்கு பெற முடியும். மாறாக, NPHH கார்டு வைத்திருப்பவர்கள் சில கட்டுப்பாடுகளுடன் மட்டுமே ரேஷன் பொருட்கள் பெற முடியும். மானியம் குறைவாகவே இருக்கும்.
இந்தப் புதிய நடைமுறை, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு நன்மை தரக்கூடியது. தகுதியுள்ளவர்கள் தங்களின் கார்டு வகையை மாற்ற விரும்பினால், ஸ்டாலின் முகாம்களில் அல்லது தங்களது பகுதிக்குட்பட்ட மண்டல அலுவலகங்களில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
Read More : அக்கா கணவருடன் ஓடிப்போன மனைவி..!! குடிக்கு அடிமையான கணவன்..!! மீண்டும் திரும்பி வந்தபோது நடந்த பயங்கரம்..!!