இன்றைய டிஜிட்டல் உலகில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. ChatGPT போன்ற AI சாட்போட்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஏதேனும் சந்தேகம், தகவல் தேவை, வழிகாட்டல் அல்லது மனம் தளர்ச்சியைக் கூட பயனர்கள் ChatGPTயிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
இது பற்றி சமீபத்தில் OpenAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் அளித்த நேர்காணல் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. “மக்கள் ChatGPTயை ஒரு நண்பராகவே நினைத்து அதில் தங்கள் உணர்ச்சிகளையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் இது பாதுகாப்பானது அல்ல” என அவர் கூறியுள்ளார். AI ஒரு மருத்துவர், வழக்கறிஞர் அல்லது சிகிச்சையாளரல்ல. எனவே அது ‘ரகசிய உரையாடல்’ எனும் சட்ட பாதுகாப்பு முறைமையை தற்போது கொண்டிருக்கவில்லை, என ஆல்ட்மேன் எச்சரிக்கிறார்.
ChatGPT-யில் நம் உரையாடல்கள், சில சந்தர்ப்பங்களில் OpenAI ஊழியர்களால் அணுகக்கூடியதாக இருக்கலாம். இது AI-யின் பயனர்களை புரிந்து கொள்ளவும், சேவையை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆனால் அதேவேளை, இது ஒரு தனியுரிமை ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார்.
மேலும் “நீதிமன்ற உத்தரவு வந்தால், பயனர்களின் உரையாடல்கள் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சிலருக்கு உரிய சட்டத்தரப்பட்ட பாதுகாப்பு இல்லாமல் தனிப்பட்ட விவரங்கள் உடைத்துச் செல்லப்படும் அபாயம் இருக்கிறது,” என்று ஆல்ட்மேன் கூறியுள்ளார்.
OpenAI தரப்பில், பயனர்கள் நீக்கிய உரையாடல்கள் 30 நாட்களுக்குப் பிறகு தானாகவே அழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் WhatsApp போன்ற சேவைகளில் உள்ள மறைகுறியாக்கம் (end-to-end encryption) வசதி OpenAI இல் இல்லை என்பதை ஆல்ட்மேன் தெளிவாகச் சொல்கிறார்.
AI சாட்போட்கள், குறிப்பாக ChatGPT, உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க, வழிகாட்ட உதவுகிறது. ஆனால், அது உங்கள் மன அழுத்தங்கள், உறவுச் சிக்கல்கள் போன்ற தனிப்பட்ட விஷயங்களில் பாதுகாப்பாக இல்லை. எனவே AI-யுடன் நீங்கள் பகிரும் தகவல்களில் கவனம் தேவை, என்று OpenAI நிறுவனமே எச்சரிக்கிறது.
Read more: பிங்க் உப்பு Vs வெள்ளை உப்பு!. உண்மையில் எது ஆரோக்கியமானது?