அயர்லாந்தின் கடலுக்கு நடுவே அமைந்துள்ள தீவுகளில் வாழும் பழங்குடியின மக்கள் பாலியல் உறவு முறைகளில் வித்தியாசமாகவும், விசித்திரமான கட்டுப்பாடுகளையும் பின்பற்றி வருவது ஆச்சரியத்தையும் சுவாரஸியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்து நாட்டில் கடலுக்கு நடுவே பல தீவுகள் அமைந்துள்ளன. இதில், ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு தீவுகளிலும் வசித்து வரும் மக்களிடையே பழக்க வழக்கங்களில் வேறுபாடு உள்ளது. அந்தவகையில், அங்குள்ள தீவுகளில் ஒன்றான இன்னிஸ் பெக் என்ற தீவில் 350க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஐரிஷ் மொழி பேசும் இந்த பழங்குடியின மக்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் பிடித்தல் உள்ளிட்டவற்றை தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் இங்கு வாழும் மக்கள் பாலியல் உறவு முறைகளில் வித்தியாசமாகவும், விசித்திரமான கட்டுப்பாடுகளையும் பின்பற்றி வருவது ஆச்சரியத்தையும் சுவாரஸியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, உடலுறவை மோசமாக கருதும் இவர்கள், தாங்களாகவே சில கட்டுப்பாடுகளை வகுத்து வாழ்ந்து வருகின்றனர்.
அதன்படி, தாம்பத்தியத்தின்போது உடலில் இருந்து முழு ஆடைகளை அகற்றுவதை குற்றமாக கருதும் அவர்கள், திருமணமான தம்பதியாக இருந்தாலும் கூட உள்ளாடை அணிந்தே தாம்பத்தியத்தில் ஈடுபடவேண்டும் என்றும் பெண்களை அது பலவீனமாக்கும் என்பதால் அடிக்கடி தாம்பத்தியத்தில் ஈடுபட கூடாது என்றும் குழந்தைகள் வேண்டுமென்றால் மட்டும் கணவன் – மனைவி உடலுறவில் ஈடுபடலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுயஇன்பம், முத்தம், ஓரினச்சேர்க்கை, திருமணத்துக்கு முந்தைய காதல், உடலுறவு உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் குளித்தால் ஒவ்வொருவரும் அழகாக தெரிவார்கள் என்பதால் பலபேர் குளிப்பதை கூட தவிர்த்து விடுவார்களாம். மாறாக அனைவரும் கை, கால், முகத்தை மட்டுமே தண்ணீர் கொண்டு கழுவி கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.
திறந்த வெளியில் சிறுநீர், இயற்கை உபாதை சென்றால் கடும் தண்டனை வழங்கப்படும். மேலும் அனைத்து வகையான நடவடிக்கைகளிலும் பாலினம் ரீதியாக ஆண், பெண்கள் என தனித்தனியே பிரித்து வைக்கப்படுகிறார்கள். அதோடு, சிறுவர்கள் மட்டுமே செய்யக்கூடிய செயல், சிறுமிகள் மட்டுமே செய்யக்கூடிய செயல் என பல விஷயங்கள் தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் வீட்டுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். வெளியே வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சுவாரஸ்யமான கட்டுபாடுகளுடன் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கை முறை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.