உடலில் இந்த பிரச்சனை இருப்பவர்கள் பீரை தொடவே கூடாது..!! மீறினால் உயிருக்கே ஆபத்து..? நிபுணர்கள் எச்சரிக்கை..!!

Beer 2025

உலகில் மிகவும் பிரபலமான மதுபானங்களில் ஒன்றாக பீர் இருந்தாலும், சிலர் புத்துணர்ச்சிக்காக இதனை அருந்தினாலும், அதை அடிக்கடி குடிக்கும் பழக்கம் ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகளை கொண்டவர்கள் பீர் அருந்துவதை தவிர்ப்பதன் மூலம், தீவிரமான பக்கவிளைவுகளை தவிர்க்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். யார் பீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.


செலியாக் நோய் :

செலியாக் நோய் என்பது சிறு குடலை பாதிக்கும் ஒரு செரிமான நோய் ஆகும். பீரில் குளூட்டன் (Gluten) என்ற புரதத்தின் அளவு அதிகமாக உள்ளது. செலியாக் நோயாளிகள் பீர் குடிக்கும்போது, அது குடல் வீக்கம், கடுமையான வயிற்று எரிச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பீரை முற்றிலுமாக தவிர்ப்பது அவசியம்.

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் :

உடல் எடையைக் குறைக்க இலக்கு வைத்திருப்பவர்களுக்கு பீர் குடிக்கக் கூடாது. பீரில் கலோரிகள் அதிகம் இருப்பதால், அது உடலில் தேவையற்ற கொழுப்பைச் சேர்க்கிறது. தொடர்ச்சியாகப் பீர் அருந்துபவர்களுக்கு விரைவில் தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிக்கும். இதனால், எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் பீர் குடிப்பதை நிறுத்திக் கொள்வதே நல்லது.

நீரிழிவு நோயாளிகள் :

நீரிழிவு (சர்க்கரை நோய்) நோயாளிகள் அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் பீர் குடித்தால், இரத்த குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளது. பீரில் உள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் காரணமாக, உடலில் இன்சுலின் எதிர்ப்புத் திறன் அதிகரித்து, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமாகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் பீர் அருந்துவதைத் தவிர்ப்பது மிகவும் பாதுகாப்பானது.

செரிமானக் கோளாறு உள்ளவர்கள் :

நெஞ்செரிச்சல் அல்லது அமில ரிஃப்ளக்ஸ் (Acid Reflux) போன்ற இரைப்பை பிரச்சினைகள் உள்ளவர்கள் பீர் குடித்தால், நிலைமை மோசமடையும். அதேபோல், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) உள்ளவர்களுக்கும், பீர் குடிப்பது வீக்கம், அதிக வாயு, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை தீவிரப்படுத்தும். இந்த செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள் மது அருந்துவதை முற்றிலும் தவிர்ப்பது நலம் தரும்.

கொலஸ்ட்ரால் அதிகரிப்பு :

பீரில் நேரடியாக கொலஸ்ட்ரால் இல்லாவிட்டாலும், இதில் ஆல்கஹால் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன. இந்த ஆல்கஹால் உடலில் உள்ள கொழுப்பை செரிமானம் செய்யும் கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதன் காரணமாக, கல்லீரலானது ட்ரைகிளிசரைடு எனப்படும் ஒரு வகையான கொழுப்பை அதிக அளவில் உற்பத்தி செய்ய தொடங்குகிறது. ரத்தத்தில் ட்ரைகிளிசரைடு அளவு அதிகரிப்பது, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை மறைமுகமாக அதிகரித்து, இருதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

Read More : சாப்பிட்ட உடனே மோசமான இந்த 5 விஷயங்களை மட்டும் பண்ணிடாதீங்க..!! ஆபத்து வருவது கன்ஃபார்ம்..!!

CHELLA

Next Post

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சந்தேகம்...! எம்.பி திருமாவளவன் பரபரப்பு...!

Tue Nov 11 , 2025
டெல்லி வெடி குண்டு சம்பவத்திற்கு உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்..? என எம்.பி திருமாவளவன் கூறியுள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது […]
thirumavalavan 2025

You May Like