பாசி பருப்பு அல்லது பச்சை பயிறு இந்திய சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். இது நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாமிரம், மக்னீசியம் போன்ற பல சத்துகளால் நிரம்பியுள்ளது. இதை அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகள் தரும். குறிப்பாக செரிமானத்தை மேம்படுத்தி, எடை குறைக்கும் தன்மை, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது போன்ற பல பயன்கள் உள்ளன.
ஆனால் சிலர் இதை சாப்பிடும்போது ஆரோக்கியத்திற்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, சில உடல்நிலைகள் உள்ளவர்களுக்கு இது ஆபத்தாக இருக்கலாம். யாரெல்லாம் பாசிப்பருப்பு உணவில் சேர்க்க கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
குறைந்த இரத்த சர்க்கரை (Hypoglycemia) உள்ளவர்கள்: பாசி பருப்பில் உள்ள இயற்கை மூலக்கூறுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையைக் கொண்டவை. அதனால், ஏற்கனவே குறைந்த சர்க்கரை அளவு (Hypoglycemia) கொண்டவர்கள் இதை சாப்பிட்டால் அவர்களின் சர்க்கரை அளவு மேலும் குறைந்து, தலைச்சுற்றல், வியர்வை, பலவீனம், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். எனவே இவ்வகை நபர்கள் பாசி பருப்பை தவிர்ப்பது நல்லது.
சிறுநீரக கல் (Kidney Stone) பிரச்சனையுள்ளவர்கள்: பாசி பருப்பில் புரதமும் ஆக்ஸலேட்டும் அதிகமாக உள்ளன. இவை சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இதை சாப்பிட்டால், கல் மேலும் பெரிதாகவோ அல்லது புதிய கல் உருவாகவோ வாய்ப்பு உண்டு. சிறுநீரக பிரச்சனையுள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதை அடிக்கடி சாப்பிடக் கூடாது.
அதிக யூரிக் அமிலம் (Uric Acid) உள்ளவர்கள்: பாசி பருப்பு ஒரு புரதம் நிறைந்த உணவு என்பதால், இதை அதிகம் சாப்பிடுவது உடலில் யூரிக் அமில அளவை உயர்த்தக்கூடும். இதனால், வாயுவாதம் (Gout), கீல்வாதம் (Arthritis) போன்ற மூட்டு வலி, வீக்கம், கடுமையான வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே யூரிக் அமிலம் அதிகமுள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
Read more: இணையம், சமூக ஊடகங்கள் முடக்கம்; ஊரடங்கு அமல்.. கட்டாக் நகரில் உச்சக்கட்ட எச்சரிக்கை.. என்ன நடந்தது?