தவெக சிறப்பு பொதுக்குழுவில் உரையாற்றிய விஜய் தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.. உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலையில் குட்டு வைத்ததாகவும், 2026 தேர்தல் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்..
மேலும் “ இன்று மக்களுக்கு இந்த அரசு மீது உள்ள நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது.. இதுவாவது முதல்வருக்கு புரியுதா? அப்படி புரியவில்லை எனில் 2026 தேர்தலில் மக்கள் ஆழமாக மக்கள் புரியவைப்பார்கள்.. மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்ற அறிக்கையை இப்போது ரெடி பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.. இப்பவும் சொல்கிறேன்.. 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி.. இந்த போட்டி இன்னும் வலிமையாக மாறி உள்ளது.. தற்போது ஏற்பட்டுள்ள இடையூறு தற்காலிகமானது.. இயற்கையும் இறைவனும் மக்கள் சக்தியாக நம்முடன் இருக்கப் போகிறார்கள்.. 100% வெற்றி நிச்சயம் நம்பிக்கை உடன் இருங்க.. ” என்று தெரிவித்தார்..
இந்த நிலையில் விஜய்யின் இந்த பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் “ தவெக பலம் வாய்ந்த கட்சி, திமுகவை நாங்கள் எதிர்ப்போம் என்று ரொம்ப நாட்களாக கூறி வருகிறார்.. அது மக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.. அதை தேர்தலின் போது பார்த்துக் கொள்வோம்.. தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் தவெகவை பற்றி அவதூறு பரப்பியதாக சொன்ன விஜய், எது அவதூறு என்பதை விளக்கவே இல்லை.. கரூர் சம்பவத்தை பற்றிய பேசிய விஜய் எது தவறு என்பதை குறிப்பிடவே இல்லை..
பின்னர் உச்சநீதிமன்றம் தலையில் குட்டியது, ஓங்கி குட்டியது என்றெல்லாம் விஜய் சொன்னார். அதில் விஜய்யின் வன்மம் தான் வெளிப்படுகிறது.. உண்மையில் என்ன நடந்தது? என்பதை விஜய் புரிந்துகொள்ளவில்லை. அந்த சம்பவத்தில் விஜய்க்கு இருக்கும் பொறுப்பை தட்டிக்கழித்து, திசை திருப்பும் வகையில் சாமர்த்தியமான தந்திரத்தை விஜய் கையாள்கிறார்..
தமிழக மக்களுக்கு எதுவும் தெரியாது என்பது போல விஜய் பேசி உள்ளார்.. அவசர அவசரமாக ஏன் தனிநபர் ஆணையத்தை அமைத்தனர் என்று பேசுகின்றனர்.. இது தவறான புரிதல்.. விஜய் பேச்சை எல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.. அவரின் விருப்பத்தை மட்டுமே அவர் பேசியுள்ளார்.. மற்றபடி விஜய் பேசியது ஒன்றுமே இல்லை..” என்று தெரிவித்தார்..



