தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராமதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..
இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.. அதன்படி பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. மேலும் கடந்த திங்கள்கிழமை பெரம்பூரில் விஜய் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. அன்றைய தினமே பெரம்பூரில் இருந்து தனது பிரச்சாரத்தையும் விஜய் தொடங்கினார்..
பெரம்பூரில் திமுக அரசை குற்றம்சாட்டிய விஜய் தவெகவுக்கு இந்த தேர்தலில் ஒரே ஒரு முறை வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறினார்.. தொடர்ந்து கொளத்தூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிகமான கூட்டம் கூடியதால் போலீசார் கூறியதை அடுத்து 2 நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டார் விஜய். மேலும் வில்லிவாக்கம் சிட்கோ நகர், அண்ணாநகரில் விஜய் பரப்புரை செய்யவில்லை.. அன்றைய தினம் அறிவிக்கப்பட்ட 4 இடங்களில் 2 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்யவில்லை. முதல் நாளிலேயே விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
இந்த சூழலில் புதுச்சேரியில் 23 இடங்களில் பரப்புரை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருந்தார்.. இதற்காக தவெக தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு 19 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. விஜய்க்கு 4 இடங்களில் மட்டுமே பரப்புரை செய்ய புதுச்சேரி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.. மேலும் 2 மணி நேரத்திற்குள் முடித்துக் கொள்ள வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.. எனவே புதுச்சேரியில் விஜய் காணொலி வாயிலாக தேர்தல் பரப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது..
Read More : தவெக வேட்பாளருக்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு.! ஊருக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு..!



