தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது.
ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று தான் செயல்பட முடியும்.. தமிழகத்தின் 17-வது சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்று அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த காபந்து அரசாக செயல்படும்.
தமிழ்நாடு முழுவதும் 2,160 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.. பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் தேர்தல் ஆணையம் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.. மறுபுறம் தமிழகத்தின் அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் நேர்காணல் என பரபரப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன..
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை நிறுத்தி வைக்கக்கோரி மதுரையை சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதால் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என மதுரை சமூக ஆர்வலர் ரமேஷ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Read More : “திமுக கூட்டணியில் இழுபறி இல்லை.. தாமதம் தான்.. விசிக வேட்பாளர்களுக்கு நேர்காணல் இல்லை..” திருமா பேட்டி..!



