PhonePe UPI Lite..!! பயனர்களுக்கு புதிய அப்டேட்..!! முழு விவரம் உள்ளே..!!

டிஜிட்டல் பேமெண்ட் தளமான PhonePe, UPI Lite அம்சத்துடன் அதன் பயன்பாட்டில் நேரலையில் வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக யுபிஐ லைட் கணக்கிலிருந்து பின் நம்பரை உள்ளிடாமல் இருநூறு ரூபாய்க்குள் குறைந்த மதிப்புள்ள கட்டணங்களை விரைவாக தொடங்க அனுமதிக்கின்றது. இந்த புதிய வசதியில் அனைத்து முக்கிய வங்கிகளாலும் ஆதரிக்கப்படுகிறது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து யுபிஐ வணிகர்கள் மற்றும் கியூர் கோடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும்.


ஃபோன் பே பயன்பாட்டில் கேஒய்சி அங்கீகாரம் இல்லாத எளிய செயல்முறையின் மூலம் அம்சத்தை செயல்படுத்தலாம் மற்றும் யுபிஐ லைட் கணக்கை உருவாக்கலாம். ஃபோன் பே-ஐ திறந்த பிறகு முகப்பு திரையில் உள்ள யுபிஐ கிளிக் செய்யவும். அதில் வானத்தில் ரூ.2,000 வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். நீங்கள் டெபாசிட் செய்ய விரும்பும் தொகையை உள்ளிட்டு டெபாசிட் செய்து கொள்ளவும். Lite-ஐ பயன்படுத்த யுபிஐ பின் நம்பரை உள்ளிடவும். அதன் பிறகு கியூஆர் ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.

CHELLA

Next Post

இந்தியாவில் இப்படி ஒரு நகரமா..? அசைவ உணவிற்கு முற்றிலும் தடை..!! எங்கு தெரியுமா..?

Sat May 6 , 2023
பயணம் செய்யும்போது சுவையான உள்ளூர் அசைவ உணவைத் தேடுவார்கள். ஆனால், குஜராத்தில் அசைவ உணவை சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்ட ஒரு நகரம் உள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் ‘உலகின் சைவத் தலைநகரம்’ (Vegan Capital of the World) என்று அறியப்படுவது போல இந்தியாவின் சைவ நகரமான குஜராத்தில் உள்ள பாலிதானா நகரத்தைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். பாலிதானா உலகின் முதல் சைவ நகரம் – First Vegetarian City […]

You May Like