பெண்களின் பாதுகாப்பையும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு “பிங்க் ஆட்டோ திட்டத்தை” சென்னை நகரில் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், பெண்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் தாங்களே ஆட்டோ ஓட்டி வருமானம் ஈட்டலாம்.
அரசு, ஆட்டோ வாங்குவதற்காக 40% வரை மானியம் வழங்குகிறது. மேலும், பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் மற்றும் இலவச ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.
பாதுகாப்புக்காக ஒவ்வொரு பிங்க் ஆட்டோவிலும் GPS டிராக்கிங், பேனிக் பட்டன், கேமரா உள்ளிட்ட வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவசரநிலையில் நேரடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பப்படும். தற்போது இந்த திட்டம் சென்னை நகரில் சோதனை கட்டமாக தொடங்கப்பட்டு, பின்னர் மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் விரிவாக்கம் செய்ய திட்டம் உள்ளது.
இந்த முயற்சி, பெண்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தையும், சுயதொழில் வாய்ப்பையும் ஒரே நேரத்தில் வழங்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.. ஆனால் சென்னையில் சில இடங்களில் பிங்க் ஆட்டோக்களை இயக்குவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் சென்னையில் பிங்க் நிற ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என்று ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரித்துள்ளார். சமூகநலத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியும் பிங்க் ஆட்டோவை ஆண்கள் இயக்குவதாக புகார் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
Read More : நகைப்பிரியர்கள் கவனத்திற்கு.. சரிவுக்கு பின் மீண்டும் தங்கம் விலை உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ..!



