தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. பல ஹிட் படங்கள் கொடுத்தாலும் சில ஆண்டுகளிலேயே காணாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் த்ரிஷா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாகவே நடித்து வருகிறார்.. லியோ, தக் லைஃப், விடாமுயற்சி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.. மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, தமிழில் சூர்யா உடன் கருப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.. ஆனால் தற்போது 42 வயதாகும் த்ரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்..
திரையுலகில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தாலும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவ்வப்போது சில வதந்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது த்ரிஷாவுக்கு விரைவில் திருமணமாகப் போகிறது என்ற தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.. அதன்படி பஞ்சாபை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை அவர் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.. இரு வீட்டாரின் குடும்பத்தினரும் திருமணத்தை பேசி முடித்துவிட்டதாகவும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றெல்லாம் செய்திகள் பரவியது.
இந்த நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமணம் குறித்து பதிலடி கொடுத்துள்ளார்.. அவரின் பதிவில் “ என் வாழ்க்கையை பற்றி மற்றவர்கள் பிளான் பண்ணுவது எனக்கு ரொம்ப பிடித்துள்ளது.. விரைவில் என் ஹனிமூன் பற்றியும் அவர்களே பிளான் பண்ணுவார்கள் என காத்துக் கொண்டிருக்கிறேன்..” என பதிவிட்டுள்ளார்.. இதன் மூலம் தனது திருமணம் குறித்து பரவும் வதந்திக்கு த்ரிஷா தரமான பதிலடி மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்..
Read More : அன்று ஐஸ்வர்யா ராய்க்கு டஃப் கொடுத்தவர்.. ஆனா இன்று துறவி.. யார் இந்த நடிகை?