சேலத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற சிறிய ரக விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் சாலையில் தரையிறக்கம் செய்யப்பட்டது. சாலையில் பெருமளவு போக்குவரத்து இல்லாத நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
எனினும், விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது. விமானத்தில் இருந்த பயிற்சி விமானி உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர். விமானத்தில் இருந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விமானப்படை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இந்த அவசரத் தரையிறக்கம் நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலையில் தரையிறக்கப்பட்ட விமானத்தை மீட்டு எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சாலையில் தரையிறங்கிய விமானத்தை காண மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



