பிளாஸ்டிக் தடை.. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த புதிய தகவல்..

பிளாஸ்டிக் தடை உத்தரவை முழு அளவில் அமல்படுத்த இயலாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கான உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.. அதில், பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட்கள், எண்ணெய், மருத்துவ பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில் விற்கப்படுவதால் தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..


மேலும் “ தமிழ்நாட்டில் உள்ள 8,000 பிளாஸ்டிக் ஆலைகள் ரூ. 3,200 கோடி ஜி.எஸ்.டி. வரி பங்களிப்பை வழங்கி வருகிறது.. பிளாஸ்டிகிற்கு மாற்றாக வேறு பொருட்கள் சந்தையில் இல்லாததால், தடை உத்தரவை முழு அளவில் அமல்படுத்த இயலாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை ஜூன் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

RUPA

Next Post

பட்டியலின தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தீ பற்ற வைத்து எரிக்க முயன்ற கொடூரம்!

Sat Apr 8 , 2023
ராஜஸ்தான் மாநிலத்தில் தனியாக வீட்டிலிருந்த பட்டியல் இனத்தைச் சார்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு நெருப்பு வைத்து எரித்த சம்பவம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சார்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மா மாவட்டத்தைச் சார்ந்த 40 வயது தலித் பெண் ஒருவரை அப்பகுதியைச் சார்ந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரது உடலில் தீ வைத்து காயப்படுத்தி இருக்கிறார். இறந்த […]
IMG 20230408 WA0128

You May Like