நாட்டில் ஃபாஸ்டேக் (FASTag) முறையில் நடைபெறும் முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், Know Your Vehicle (KYV) என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த KYV புதுப்பிப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
வாடிக்கையாளர் குறித்த தகவல்களை அவ்வப்போது புதுப்பிப்பது போல, இனி வாகனம் குறித்த தகவல்களையும் புதுப்பிக்க வேண்டும். இந்த அவசர நடவடிக்கைக்கான முக்கியக் காரணம், சில லாரி ஓட்டுநர்கள் கார்களுக்கான ஃபாஸ்டேக்கைப் பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் குறைந்த கட்டணம் செலுத்தி வந்த முறைகேடுகள்தான். இதனால் ஏற்பட்ட நிதி இழப்பையும், குழப்பமான நடைமுறைகளையும் சரிசெய்யும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) இந்த திட்டத்தை தேசிய பணப்பட்டுவாடா கழகம் (NPCI) அறிவித்துள்ளது.
KYV நடைமுறையின் கீழ், அனைத்து ஃபாஸ்டேக் பயனர்களும் தங்கள் வாகனம் மற்றும் பதிவுச் சான்றிதழின் (RC) படங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம், ஃபாஸ்டேக் சரியான வாகன வகையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும். ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் இந்த சரிபார்ப்பை மீண்டும் செய்வது கட்டாயம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “இது ஃபாஸ்டேக்கை வாகன கண்ணாடியில் ஒட்டாமல் இருப்பது, தவறான வாகன வகைக்குப் பயன்படுத்துவது போன்ற முறைகேடுகளுக்கு KYV முற்றுப்புள்ளி வைக்கும் என்றார். மேலும், ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்டேக் என்ற கொள்கையைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Read More : அரசு நிகழ்ச்சியில் இனி பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை..!! முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு..!!



