BSNL நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.50,500 வரை சம்பளம்..!! உடனே விண்ணப்பிக்கலாம்..!!

BSNL 2026

மத்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), தற்போது காலியாக உள்ள 120 ‘சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி’ (Senior Executive Trainee) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் கிளைகளில் பணியாற்ற தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கல்வி தகுதி மற்றும் ஊதியம்: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.இ அல்லது பி.டெக் (B.E / B.Tech) முடித்திருக்க வேண்டும் அல்லது சிஏ, சிஎம்ஏ (CA / CMA) போன்ற நிபுணத்துவப் படிப்புகளை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 24,900 முதல் 50,500 வரை ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு மற்றும் தளர்வு: விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பிரிவைப் பொறுத்து 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை மற்றும் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு (Online Exam) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூபாய் 2,500-ம், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூபாய் 1,250-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள நபர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bsnl.co.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 07, 2026 ஆகும்.

கூடுதல் விவரங்கள் : https://drive.google.com/file/d/13mMTnh-tE3bInI2eESNiwn8HdHa6DezH/view

Read More : திடீர் திருப்பம்..!! திமுகவுக்கு தாவும் அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்..? அதிர்ச்சியில் இபிஎஸ்..!!

CHELLA

Next Post

கடைசி இரவாக மாறிப்போன முதலிரவு..!! மனைவிக்கு அந்த இடத்தில் அறுவை சிகிச்சை..!! ஆடிப்போன கணவன்..!! அம்பலப்படுத்திய RTI..!!

Mon Feb 9 , 2026
மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரி பகுதியில், திருமணமான சில நாட்களிலேயே புது மாப்பிள்ளை ஒருவர் தனது மனைவியின் மறைக்கப்பட்ட உண்மையை ஆதாரத்துடன் கண்டுபிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலிரவு அன்று மனைவியின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான தழும்புகள் இருப்பதை கணவர் கவனித்துள்ளார். இது குறித்து அவர் கேட்டபோது, மனைவி தரப்பில் இருந்து முன்னுக்குப் பின் முரணான பதில்களே கிடைத்துள்ளன. இதனால் உண்மையை அறிய முடிவு செய்த […]
Sex 2025 6

You May Like