9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி.. கோவையில் பிஎம் கிசான் 21-வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி..!

pm kisan

2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் திட்டம் உலகின் மிகப்பெரிய நேரடி மானியத் திட்டமாக மாறியுள்ளது. இதன் கீழ், தகுதியுள்ள விவசாயிகள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.6,000 ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் – பெறுகிறார்கள். பணம் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் 20 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், 21-வது தவணைக்காக விவசாயிகள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்..


இந்த நிலையில் பிரதமர் கிசான் திட்டத்தின் 21-வது தவணை ரூ.2000 நிதியை கோவை விழாவில் பிரதமர் மோடி விடுவித்தார்.. நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி  பி.எம். கிசான் நிதி விடுவிக்கப்பட்டது..

விவசாயிகள் தங்கள் பெயரை எப்படி சரிபார்ப்பது?

முதலில், pmkisan.gov.in. என்ற PM கிசான் போர்டலை பார்வையிடவும்.

முகப்புப் பக்கத்தில் தோன்றும் ‘Farmers Corner’ பகுதிக்குச் செல்லவும்.

‘Beneficiary List’. என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தை நிரப்பவும்.

‘Get Report’ என்பதைக் கிளிக் செய்து கிராமப் பட்டியலில் உங்கள் பெயரைப் பார்க்கவும்.

பெயர் பட்டியலில் இல்லையென்றால் என்ன செய்வது?

பதிவு செய்த பிறகும் பெயர் பட்டியலில் இல்லையென்றால், உங்கள் பகுதியின் மாவட்ட அளவிலான குறை தீர்க்கும் கண்காணிப்புக் குழுவைத் தொடர்பு கொள்ளவும்.

இந்தக் குழுக்கள் விடுபட்ட பெயர்கள் அல்லது தவறான உள்ளீடுகள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.

இது தவிர, வேறு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், PM-Kisan உதவி எண்களை – 155261 மற்றும் 011-24300606 ஐ அழைக்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 6000 நிதி உதவியை வழங்குகிறது.. ரூ.2000 என 3 தவணைகளில் வழங்கப்படுகிறது. இது விவசாயிகளின் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது..

Read More : கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

RUPA

Next Post

“பீகார் காற்று இங்கேயும் வீசுகிறதோ என நினைத்தேன்..” கோவையில் பிரதமர் மோடி பேச்சு..!

Wed Nov 19 , 2025
கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.. அப்போது வணக்கம் என்று கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.. மேலும் புட்டபர்த்தி விழாவுக்கு சென்றதால் 1 மணி நேரம் தாமதமானதற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார்.. மேலும் “ சிறுவயதில் தமிழ் கற்றுக் கொண்டிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு, நான் இங்கு மேடைக்கு வந்த போது […]
modi 2

You May Like