நாடு முழுவதும் உள்ள சிறு குறு விவாசயிகளை ஊக்குவிக்கும் வகையில், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan) திட்டம் மத்திய அரசால் 2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. நலிவடைந்த விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில், ஆண்டுதோறும் ரூபாய் 6 ஆயிரம் என 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இதுவரை 19 தவணைகளாக தொகை வழக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் தற்போது 20வது தவணையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 19வது தவணை மூலம் 10, 04, 67,693 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என PM கிசானின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் நீண்ட காலமாக 20வது தவணைத்தொகைக்காக காத்திருக்கும் நிலையில், இன்று அதற்கான அறிவிப்பை பிரமர் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் மோதிஹரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடிகலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். அதில் ரூ.7100 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கப் போவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் ஐடி, ரயில்வே, சாலைகள் போன்ற திட்டங்கள் அடங்கும்.
அப்போது கிசான் யோஜனாவின் 20வது தவணையையும் எப்போது என்ற தகவலையும் பிரதமர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்புக்குப் பிறகு, திட்டத்தின் ரூ.2000 விவசாயிகளின் கணக்கில் மாற்றப்படும். PM கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பெற உங்கள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைப்பது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: பிரியாணி சாப்பிட்ட பிறகு கூல் ட்ரிங்க்ஸ் குடிக்கும் பழக்கம் இருக்கா..? அவசியம் இத படிங்க..