சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்..
பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து நேற்று காலை அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.. அதில் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது என்பது தெரியவந்தது.
மேலும் ராமதாஸின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.. 2 நாட்கள் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.. தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே நேற்று காலை ராமதாஸை சந்திக்க அவரின் மகன் அன்புமணி ராமதாஸ் மருத்துவமனைக்கு சென்றார்.. ஆனால் அவர் ஐசியூவில் இருந்ததால் அவரை பார்க்க முடியவில்லை. தொடர்ந்து நேற்று மதியம் அப்போலோ சென்று ராமதாஸின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.. அவரின் உடல்நலம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தற்போது சந்தித்து நலம் விசாரித்தார்.. அவரின் உறவினர்களிடமும் ராமதாஸின் உடல்நிலை குறித்து அவர் கேட்டறிந்தார்.. சீமான், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தனர்.. அதே போல் நடிகர் ரஜினிகாந்த் ராமதாஸின் உடல்நிலை போனில் நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.. ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு பின் உடல் நலம் தேறிய நிலையில் அவர் இன்று வீடு திரும்பினார். மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்களா என்ற கேள்விக்கு எனக்கு ஓய்வே கிடையாது என ராமதாஸ் பதிலளித்தார்.
Read More : “நோயாளிகள் அல்ல.. இனி மருத்துவ பயனாளிகள்னு சொல்லுங்க..!!” – முதலமைச்சர் ஸ்டாலின் புது உத்தரவு..



