பாமக ராமதாஸ் அணியின் இளைஞரணி தலைவராக இருந்த ஜி.கே.எம். தமிழ்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.. அவர் டெல்லியில் கே.சி. வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தந்தை ஜி.கே. மணி தற்போது பென்னாகரம் எம்.எல்.ஏவாக உள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் மகன் தமிழ்க்குமரன் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டால் தமிழ்குமரன் அங்கு வேட்பாளராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..



