சி.வி. சண்முகம் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யணும்.. நயன்தாரா குறித்த அருவருப்பான பேச்சு.. எம்.பிக்கள் கனிமொழி, ஜோதிமணி கண்டனம்..!

CV Shanmugam kanimozhi jothimani

திமுக அரசை கண்டித்து என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது… அந்த வகையில் விழுப்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் பேசிய சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக அரசின் உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை விமர்சித்தார்.. மேலும் “ அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார்.. முதலமைச்சர் அதைவிட ஒரு படி மேலே போய் உங்க கனவ சொல்லுங்க.. நிறைவேற்றுகிறோம் என்று முதல்வர் சொல்கிறார்.. ஆமாம்.. எனக்கு நயன்தாரா வேண்டும்.. கனவை நிறைவேறுவாரா? அதுவும் ஆட்சி முடிந்த நிலையில், உங்க கனவை சொல்லுங்க நான் நிறைவேற்றுகிறேன்.. என்று சொல்கிறார்.. சி.வி. சண்முகம் பொதுவெளியில் பேசிய இந்த அநாகரீக பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..


அவரின் இந்த கருத்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் திமுக எம்.பி கனிமொழி சி.வி. சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை. அதனால், பெண்களை இழிவு படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் காங்கிரஸ் எம்.பி ஜோஹிமணியும் சிவி சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.. தனது எக்ஸ் பதிவில் “ அதிமுகவின் திரு. சி. வி. சண்முகம் திருமிகு. நயன்தாரா அவர்கள் குறித்துப் பொதுவெளியில் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்திற்குரியது. ஒரு பெண்ணை பொதுவெளியில் இப்படி அப்பட்டமாக ,ஆபாசமாகப் பேசுவதை நாம் இயல்பாகக் கடந்து போய்விட முடியாது. திரைத்துறையில் ஒரு வெற்றிகரமான பெண், இன்னொருவரின் மனைவி, இரண்டு குழந்தைகளின் தாய் பல்வேறு போராட்டங்களைக் கடந்து,தொடர்ந்து பயணிக்கும் ஒரு பெண்ணை மிகவும் மோசமான பார்வையோடு அணுகுவது,பேசுவது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. சட்டப்படியும் தவறு.

அரசியல் மேடைகளில் பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற மனநிலை ஆபாசமானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. பல்வேறு தடைகளை,போராட்டங்களைக் கடந்து தான் சார்ந்த துறைகளில் வெற்றிகரமாகப் பயணிக்கும் பெண்களை மீண்டும் மீண்டும் உடலாக மட்டுமே பார்க்கும், அவமதிக்கும் மனநிலையை நாம் ஒரு சமூகமாக கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பெண்கள் பொதுவெளியில் பாதுகாப்பாகவும்,கண்ணியமாகவும் உணர முடியும்.திரு. சி. வி சண்முகம் தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.


RUPA

Next Post

மத்திய அரசின் புதிய திட்டம்..! பெண்களின் வங்கிக் கணக்குகளில் பணம்..! அனைவருக்கும் கொண்டாட்டம்..!

Tue Mar 17 , 2026
மத்திய அரசு விரைவில் பெண்களுக்காக மற்றொரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. தொழில் தொடங்க விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ஒரு புதிய திட்டத்தை அது தொடங்க இருக்கிறது. இத்தகவலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிவித்தார். தொழில்துறையில் சிறந்து விளங்க விரும்பும் பெண்களுக்கு, 10 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான கடன்கள் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தச் சலுகை […]
money 2

You May Like