Flash : நயினார் நாகேந்திரன் கைது! திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பதற்றம்..!

nainar arrest

கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதின்றக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி தீர்ப்பு வழக்கினார்.. எனினும் இந்த உத்தரவு நேற்று அமல்படுத்தப்படாத நிலையில், மனுதாரர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது திருப்பரங்குன்ற மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.. 10 பேர் சென்று மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.. இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை எனில் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்று நீதிபதி எச்சரித்தார். மேலும் மனுதாரர் 10 நபர்களுடன் தீபம் ஏற்ற காவல்துறை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.


இதையடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.. 10 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்த நிலையில், தங்கள் அனைவரையும் அனுமதிக்குமாறு பாஜகவினர் வாக்குவாதம் செய்து வருவதால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.. பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மலை மீது ஏற முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை தகர்த்து கோயிலை நொக்கி பாஜகவினர் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது..

காவல்துறையினருடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் சென்றுள்ளார்.. அப்போது மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரி காவல்துறையினர் உடன் நயினார் நாகேந்திரன் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதால் அனுமதிக்க முடியாது என்று போலீசார் தெரிவித்தனர்.. இதனால் மீண்டும் திருப்பரங்குன்றம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது..  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்..

எனினும் போலீஸ் வாகனத்தை மறித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்..

Read More : Breaking : திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும்.. நீதிபதி அதிரடி உத்தரவு..

RUPA

Next Post

“ கலவரத்தை தூண்டும் கயவர்களுக்கு இபிஎஸ் துணை போவது வெட்கக்கேடு.. CM ஸ்டாலின் இருக்கும் வரை அது நடக்காது..” அமைச்சர் ரகுபதி காட்டம்!

Thu Dec 4 , 2025
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பாஜக RSS ன் கைக்கூலியாக மாறி அண்ணாதிமுகவை அமித்ஷாதிமுக வாக மாற்றிய அடிமை பழனிசாமி, தமிழ்நாட்டு மக்களின் நலனைப் பற்றி துளியும் அக்கறையின்றி அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணைபோய் நிற்பது வெட்கக்கேடு. மதப்பிரிவினைவாத சக்திகளும் , அடிமைக் கைக்கூலிகளும் எவ்வளவு முயன்றாலும், மாண்புமிகு […]
eps raghupathi 1

You May Like