fbpx

விஜய் – ஆளுநர் சந்திப்பை வரவேற்ற அண்ணாமலை..!! அனைத்து கட்சியினரும் போராட முன்வர அழைப்பு..!!

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்த மாணவி, பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து, மாணவி அளித்த புகாரின் பேரில் ஞானசேகரனை போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோட்டூர்புரம் போலீசார் விசாரணையின் முடிவில், ஞானசேகரன் மீது 8 சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் போராட முன்வர வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்து புகாரளித்தது வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார். நமது சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், வழக்கை திசை திருப்ப திமுக அரசு தொடர்ந்து முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Read More : ”பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்”..!! ஆளுநரை சந்தித்து விஜய் மனு..!! அறிக்கை வெளியிட்ட தவெக..!!

English Summary

Tamil Nadu BJP leader Annamalai has called on all parties to come forward to protest the rape of a student at Anna University in Chennai.

Chella

Next Post

”பள்ளி பாடப்புத்தகத்தில் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு”..!! விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர்..!!

Mon Dec 30 , 2024
With the aim of making school students aware of the life history of Nallakannu Ayya, a decision will be taken to include his biography in the textbook after consulting the Chief Minister.

You May Like