fbpx

கைதாகிறார் முன்னாள் பிரதமர்..? பிடிவாரண்ட் உத்தரவு..!! குவிந்த தொண்டர்கள்… குவியும் போலீஸ்..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்படலாம் என்பதால், அவரது வீட்டின் முன் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கான் அரசு கவிழ்ந்து, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி நிறுவப்பட்டது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அவரது ஆதரவு எம்பிக்கள் அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்து இம்ரான் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, புதிய பிரதமராக பிரதான எதிர்க்கட்சியின் ஷெபாஸ் ஷெரிப் தேர்வானார். சர்வதேச சதி காரணமாக தனது ஆட்சி பறிபோனது. மக்களின் ஆதரவோடு நான் மீண்டும் ஆட்சி அமைப்பேன் என சூளுரைத்த இம்ரான் கான், தொடர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார்.

கைதாகிறார் முன்னாள் பிரதமர்..? பிடிவாரண்ட் உத்தரவு..!! குவிந்த தொண்டர்கள்... குவியும் போலீஸ்..!!

அவ்வாறு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், ’தங்களது கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினரையும், பெண் நீதிபதியையும் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அவர் மீது அரசு அதிகாரிகளை மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இம்ரான் கானுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, அங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதி சவுத்ரி முன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் இம்ரான் கான். ஆனாலும், இம்ரான் கானின் அவதூறு பேச்சுக்கு பாகிஸ்தான் மாஜிஸ்ட்ரேட் கைது வாராண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

கைதாகிறார் முன்னாள் பிரதமர்..? பிடிவாரண்ட் உத்தரவு..!! குவிந்த தொண்டர்கள்... குவியும் போலீஸ்..!!

இந்நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்படலாம் என்பதால் அவரது வீட்டின் முன் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இம்ரான் கட்சி தொண்டர்கள் அங்கு திரண்டு அமளியில் ஈடுபடுவதை தவிர்க்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Chella

Next Post

வெற்றியை தக்கவைக்குமா இந்திய அணி..? தென்னாப்ரிக்காவுடன் இன்று 2-வது ஆட்டம்..!!

Sun Oct 2 , 2022
இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகள் இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி, கவுகாதியில் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வந்துள்ளது. இதில், முதல் டி20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாஹர் அபார பவுலிங் செய்து, தென் ஆப்பிரிக்கா அணியை […]
இந்தியாவுக்கு இறுதிவரை பயத்தை காட்டிய வங்கதேசம்..!! தொடக்கத்தில் இருந்தே அதிர்ச்சி நகர்வுகள்..!!

You May Like