காங்கிரஸ் , திமுக கட்சிகளில் இருந்து வெளியேறி பா.ஜ.கவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு மாநில தலைவர் பொறுப்பு கொடுக்க உள்ளதாக பெயர் அடிபட்டு வருகின்றது.
நடிப்பால் ஈர்த்த நடிகை குஷ்பூ சமீபத்தில் ரஜினியுடன் அண்ணாத்தே திரைப்படத்தில் நடித்தார். முன்னதாக அவர் அரசியல் பிரவேசத்தில் ஆர்வம் காட்டி வந்தார். முதலில் திமுகவில் இணைந்த அவருக்கு கலைஞரிடம் நல்ல அங்கீகாரம் இருந்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதில்இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது கட்சியில் உள்ளாரா ? இல்லையா என்ற அளவிற்கு இருக்கின்றார்.
சமீபத்தில் இயக்குனர் பேரரசு , பெண்கள் ஆண்களுக்கு நிகராக ரயில் ஓட்டுகின்றனர். , ஆட்டோ ஓட்டுகின்றர் டாக்டராகின்றனர் என்பது மட்டும் மன தைரியம் பெண்களுக்கு எதை குறிக்கின்றதோ அது ஆணுக்கு நிகர் . பெண் தொழிதிபராக இருந்தாலும் குறிக்காது. அரசியலில் குதிக்கும் பெண்களுக்கு மட்டுமே அந்த மனத்திடம் இருக்கும். அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு இரும்புப் பெண் மணி என்கின்றோம். அந்த வரிசையில் குஷ்பூ இருக்கின்றார் என பெருமையாக பேசினார். தமிழர்களை விட தமிழ் மொழியை குஷ்பூ அழகாக பேசுகின்றார் எனவும் பாராட்டினார்.
பாஜ சார்பில் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியை சந்தித்தார். பின்னர் ஒரு சில கட்சி நிகழ்ச்சியில்தான் அவரை பார்க்க முடிகின்றது. கட்சியை நம்பி வந்த நிலையில் அவர் அரசியலில் ஊக்குவிக்கப்படவில்லை. பா.ஜ.க.வில் முக்கிய தலைவர்களுக்கெல்லாம் பொறுப்பு வழங்கப்பட்டது. ஐ.பி.எஸ். அண்ணாமலை அவர்களுக்கு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இவருக்கு அடுத்தபடியாக அந்த பதவிக்கு வானதி சீனிவாசன் , மதுரை பேராசிரியர் சீனிவாசன் , போன்றவர்களின் பெயர்கள் அடிபடுகின்றது.
ஆனால் , மாநில தலைவர் பதவிக்கு பரபரப்பாக இருக்கக்கூடிய , கம்பீரமான ஒருவர் , பரிட்சயமான ஒருவர் இருக்க வேண்டும் என்று கமலாலய வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றனர். எனவே அடுத்த தலைவராக குஷ்பூவை ஏன் நியமிக்க கூடாது என்பது மற்ற உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது. அவருக்கு பதவி கொடுக்கப்பட்டால் விவேகமாக செயல்படுவார் எனவும் பெரும்பாலானோர் பேசிக் கொள்கின்றனர்.