தமிழ்நாட்டின் பொது பட்ஜெட், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், இதுவரை 4 வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டு பல திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மேலும் 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
➥ பசுமை தமிழ்நாட்டை உருவாக்க தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும்.
➥ 35 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு பயிர் காப்பீடு வசதி அளிக்க ரூ.241 கோடி ஒதுக்கீடு.
➥ கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை டன்னுக்கு ரூ.249ஆக உயர்வு.
➥ உழவர்களின் நிலங்களில் விதைப்பண்ணைகள் அமைத்து விதைகள் கொள்முதல் செய்யப்படும்.
➥ உயர் விளைச்சல் தரக்கூடிய இரகங்களின் சான்று விதைகள் 39,500 மெட்ரிக் டன் அளவில் விநியோகம்.
➥ முதலமைச்சரின் மருந்தகம் போல, முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.
➥ இந்த மையங்களில் விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படும். மேலும், வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.
➥ ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பிலான இந்த மையங்களை அமைக்க 30% மானியம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும்.