fbpx

BUGDET BREAKING | வேளாண் துறைக்கு மொத்த நிதியாக ரூ.45,661 கோடி ஒதுக்கீடு..!! அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்

➥ உழவர்களுக்கு இலவச மின் இணைப்புக்கான கட்டண தொகையாக ரூ.8,188 கோடி ஒதுக்கீடு.

➥ ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மீன் வளங்களை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

➥ 1,000 மீனவ மகளிருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க ரூ.38 லட்சம் ஒதுக்கீடு.

➥ ஊரகப் பகுதிகளில் நீர் நிலைகளில் ஒரு கோடி மீன்விரலிகள் இருப்பு வைக்க ரூ.75 லட்சம் ஒதுக்கீடு.

➥ கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 9,36,000 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 269.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

➥ வேளாண் துறைக்கு மொத்த நிதியாக ரூ.45,661 கோடி ஒதுக்கீடு.

Read More : BUDGET BREAKING | நாட்டுக் கோழி பண்ணை அமைக்க 50% மானியம்..!! எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சூப்பர் அறிவிப்பு..!!

English Summary

Rs. 75 lakh allocated to stock one crore fingerlings in water bodies in rural areas.

Chella

Next Post

TN Agri Budget : உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு.. ரூ.8,186 கோடி ஒதுக்கீடு.. பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு..

Sat Mar 15 , 2025
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். விவசாயிகளுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார். வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் : தென்னை பயிர் செய்யப்படும் மாவட்டங்களில், பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த ரூ. 4 கோடி ஒதுக்கீடு. 100 முன்னோடி உழவர்களை, நெல் உற்பத்தியில் சாதனை படைத்துள்ள நாடுகளுக்கு அழைத்து செல்ல திட்டம். ரூ.15 கோடியில் 7 விதை […]

You May Like