fbpx

ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க எவ்வளவு செலவு தெரியுமா?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலலிதாவின் மரணத்தை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு ஆன மொத்த செலவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மெதுவாக நடந்து வந்த விசாரணை சமீபத்தில் நிறைவடைந்தது. விசாரணை முடிவு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.

சசிகலாவை இதில் குற்றம் செய்தவர் என கருதி விசாரிக்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பின்னர் நடந்ததை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சசிகலா உள்பட 4 பேரை இதில் சேர்க்க வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக கருதி விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. என்ற முக்கிய கருத்துக்கள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

2017ல் ஆறுமுக சாமி விசாரணை ஆணையம் விசாரணையை தொடங்கியது. அந்த ஒரு வருடத்தில் ரூ.30,05,00 செலவாகி உள்ளது. 2018-19ல் ரூ.83,06,000 என்ற அளவிற்கு செலவாகி உள்ளது. 2019 -2020 ல் 1,08,31,000 ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது. 2020 -2021 ல் 1,03,25000 ரூபாய் செலவு ஏற்பட்டதாகவும் நடப்பாண்டில் 51,92,000 ரூபாய் என மொத்தம் 4 கோடியே 81 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.


Next Post

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திடீர் சோதனை...! கோடி கணக்கில் கைப்பற்றப்பட்ட பணம்...! எவ்வளவு தெரியுமா...?

Fri Oct 21 , 2022
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிக வரித்துறை திடீர் சோதனை: வரி ஏய்ப்பு செய்த வணிகர்களிடம் ரூ.1 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக வணிகவரித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பண்டிகை காலங்களில்‌ வணிகர்கள்‌ பட்டியலின்றி வணிகம்‌ செய்கின்றமை மற்றும்‌ வரி ஏய்ப்பு செய்தமை எனும்‌ புகார்களை தொடர்ந்த சென்னை (நுண்ணறிவு -1) கோட்ட அலுவலர்களால்‌ செளகார்பேட்டை, தி.நகர்‌ மற்றும்‌ இதர இடங்களில்‌ இயங்கும்‌ 52 வணிகதலங்களில்‌, 17.10.2022 மற்றும்‌ 18.10.2022 […]
ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை..!! இன்றே கடைசி நாள்..!! மாணவர்களே உடனே முந்துங்கள்..!!

You May Like