fbpx

போதை பொருள் கடத்தல்… பாஜக தலைவர்கள் பட்டியல் என்னிடம் இருக்கு…! ஆர்.எஸ்.பாரதி அதிரடி

இந்தியாவிலேயே அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலம் குஜராத் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

கடலுார் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி: தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது போல, எடப்பாடி பழனிசாமி பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். தங்களது கூட்டணிப் பிரச்சினைகளைக் கையாள முடியாமல், யார் வருவார் என காத்திருக்கும் அவர், தி.மு.க. மீது அவதூறுகளைப் பேசி வருகிறார்.

அண்ணாமலை ஏதோ தமிழ்நாட்டில்தான் போதைப் பொருள் அதிகம் இருப்பது போல பேசுகிறார். இந்தியாவிலேயே அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட மாநிலம் குஜராத். அதானிக்குச் சொந்தமான துறைமுகத்தில்தான் இந்தியாவினுடைய மொத்த போதைப் பொருள் கடத்தலும் நடக்கிறது என்று அனைத்துத் தரப்பினரும் கூறுகிறார்கள். இந்தியா முழுக்கப் போதைப் பொருள் பரவலுக்குக் காரணம் பாஜ.க.தான் போதைப் பொருள் விற்பனையில் பாஜக தலைவர்கள் பட்டியல் என்னிடத்தில் இருக்கிறது. பாஜக எம்.பி.,யின் மகன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இப்படியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் குட்கா வழக்கில் பலரும் சிக்கினர். யார் யார் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள் என்பது பத்திரிகைகளில் வந்தது. கட்சியைச் சேர்ந்த ஒருவர், போதைப்பொருள் புழக்கம் தொடர்பாகச் செயல்பட்டார் எனக் கேள்விபட்டவுடன், அடுத்த 24 மணி நேரத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது தி.மு.க. ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படி செய்தாரா…? என் கேள்வி எழுப்பினார்.

Vignesh

Next Post

Heat: தமிழகத்தில் சதமடிக்கும் வெயில்!... இந்த 2 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது!... மக்கள் கடும் அவதி!

Tue Mar 5 , 2024
Heat: தமிழகத்தில் கோடை வெப்பம் தனது வேலையை காட்டத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், ஈரோடு, பரமத்தி வேலூரில் நேற்று 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதமே வெயில் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. சென்னையில் அதிகாலை நேரங்களில் பனியும், பகலில் வெயிலும் மாறி மாறி வருவதால் நோய் தாக்குதலும் ஏற்படுகிறது.இந்தியாவில் இந்த ஆண்டு கோடை வெயில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதுபோல […]

You May Like