fbpx

’முதலில் ஷாருகானை விளம்பரதூதரிலிருந்து தூக்குங்கள் ’ !!! வெகுண்டெழுந்து சுவெண்டு அதிகாரி …

மேற்கு வங்க மாநிலத்தின் விளம்பர தூதராக  ஷாருகானுக்கு பதிலாக சவ்ரவ் கங்குலியை நியமிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் சுவெண்டு அதிகாரி கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவாக சுவெண்டு அதிகாரி பொறுப்பில் உள்ளார். அவர் கூறுகையில் , பிரதமர்மோடி இது போன்ற விஷயங்களில் விலகியே உள்ளார். மம்தா பானர்ஜி சவுரவ் கங்குலியின் குத்தகையை நீட்டிக்க நினைக்கும்பட்சத்தில் அவரை மேற்கு வங்கத்தின் விளம்பர தூதராக ஆக்கியிருக்க வேண்டும்.

’’ நடிகர் ஷாருகானுக்கு பதிலாக சவுரவ் கங்குலியை மேற்கு வங்கத்தின் விளம்பர தூதராக மாற்றுங்கள் என சுவெண்டு அதிகாரி வெகுண்டெழுந்து கருத்துக்களை தெரிவித்துள்ளார். விளையாட்டில் அரசியல் வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பி.சி.சி.ஐ தலைவருமான சவுரவ் கங்குலி இரண்டாவது முறையாக மேற்கு வங்க தூதராக ஆக்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் சுவெண்டு அதிகாரி கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கொல்கத்தா விமான நிலையத்தில் பேசிய மம்தா பானர்ஜி.. வங்காளத்திற்கு செல்லும் முன்பாக , கங்குலி ஐ.சி.சி தலைவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்த உள்ளதாக கூறினார்.

சவ்ரவ் கங்குலி தன்னை ஒரு சிறந்த நிர்வாகி என நிரூபித்து இருக்கின்றார். அவர் பி.சி.சி.ஐ. தலைவரில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை அளிக்கின்றது. இது அவருக்கு அநீதியாகும். இதில் அரசியல் வேண்டாம் என கூறினார்.

Next Post

தனுஷால் மாமனார் ரஜினிகாந்த் உச்சகட்ட சந்தோஷம் !!!

Mon Oct 17 , 2022
அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் , நானே வருவேன் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். அடுத்ததாக வாத்தி திரைப்படத்தில் தனுஷ் நடிக்கின்றார். தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்பம் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகின்றது. திரைப்படங்களில் என்னதான் பலமடங்கு வளர்ச்சியைக் கண்டாலும் குடும்ப வாழ்க்கையில் வீழ்ச்சியைத்தான் சந்தித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ய இருப்பதாக அவர்களே பதிவிட்டனர். பின்னர் […]

You May Like