தமிழ்நாட்டில் நான் தலையை நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், எதையும் நுழைப்பேன் என்னை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழிசை சவுந்தரராஜன் காட்டமாக பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் தவறு நடந்தால் நான் அதை திருத்துவதற்கு எதையும் செய்வேன் என்று தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நான்தெலுங்கானாவுக்கும் , புதுவையில் மட்டமல்ல தவறு நடக்கும் இடத்தில் நான் கேட்பேன். என விழா ஒன்றில் பேசியுள்ளார். ஆளுநருக்குண்டான சலுகைகள் பல இருந்தும், அவற்றை பயன்படுத்தாமல் இருக்கிறேன். என்னை செதுக்கியவர்களை விட ஒதுக்கியவர்களே அதிகம். தமிழ்நாட்டில் கருத்து சொல்லிவிட்டால் மூக்கை நுழைப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன். யாரும் தடுக்க முடியாது. என்னை தெலங்கானாவில் அக்கா என்றுதான் அழைக்கின்றனர். ஆனால் நான் தமிழ்நாட்டின் அக்கா என்பதை மறக்கவே மாட்டேன். ஆளுநர் கருத்து சொல்லக்கூடாது என அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. தமிழ்நாட்டில் ஏதாவது தவறு நடந்தால் சுட்டிக்காட்டி திருத்தச் செய்வேன்.
என்னைத் தடுப்பதற்கு யாராலும் முடியாது. ஆளுநர் என்றாலே ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி. மக்களைப் பார்க்கக் கூடாது என நீதிபதி தெரிவித்ததாக நீதிமன்ற உத்தரவை காட்டுகின்றனர். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு அப்படி இல்லை. தினசரி பணிகளில் தலையிடக் கூடாது என மட்டுமே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நான் இன்றைக்கு இந்தப் பணியிலிருக்கிறேன் என்றால் அது மக்களுக்காக. எனது பங்கு அரசியல் இருக்கும் என்று தெரிவித்தார்.