அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதாக திமுகவில் பேசப்பட்டு வருதற்கு உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் என்ன சொல்லியிருக்காருன்னு தெரியுமா?
ஆம், கடந்த சில நாட்களாகவே அவர் தனது திரைப்படம் சம்மந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு கட்சி சார்ந்த சில பொது நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார். இதனால் அரசியல் வட்டாரங்கள் அவர் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டு வந்தது.
இதனிடையே ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது பத்திரிகையாளர்கள் இவ்வாறு பேச்சு அடிபடுகின்றதே நீங்கள் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவது உண்மையா ? என கேட்டார்.
இதற்கு பதில்அளித்து பேசிய அவர் , அதைப் பற்றி நான் யோசித்தது இல்லை. நான் எதிர்பார்க்காத கேள்வியை நீங்கள் கேட்டதால் என்னிடம் இதற்கு பதில் இல்லை என கூறினார். மேலும் குடும்பத்தில் பெரும்பாலானவர்கள் அரசியலில் உள்ளார்கள். எனவே இவரும் அரசியலுக்கு வரக்கூடும் என்றே பேசப்பட்டு வருகின்றது. சினிமாவில் தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் பின்னர் நடிகராக ஏராளமான படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதைப் போல கிருத்திகா உதயநிதியும் அரசியலில் வர வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகின்றது.