கொடநாடு கொலை , கொள்ளை வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரமாகி உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம்…
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் 2017ல் ஏப்ரல் மாதம் 23ம் தேதி கொலை செய்யப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் பல முக்கிய புள்ளிகள் கைதாகலாம் என வட்டாரப் பேச்சுகள் அடிபடுகின்றன. இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்குநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மூளையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என கூறப்படுகின்றது. எனவே இந்த வழக்கில் அவரையும் அவரது நண்பர் இளங்கோவனும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டு வருகின்றது.
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் குடும்பத்தினர். உள்பட 316பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் எப்படியாவது இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துவிடலாம் என சி.பி.சி.ஐ.டி ஆதரங்கனை தேட முயற்சித்தபோது வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர் கைது செய்யப்படாமல் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற இக்கட்டான நிலையில் உள்ளனர்.